Mark Antony படத்துக்காக வெறித்தனமாக பாடும் விஷால்.! அட்டகாசமான Video-வை வெளியிட்ட படக்குழு.!

விஷால் நடித்து வரும் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நேற்று “அதிருதா மாமே” என்கிற பாடலை டிஆர் பாடியிருந்தார். இந்த நிலையில் தற்போது அந்தப் பாடலின் தெலுங்கு வெர்ஷனை விஷால் பாடியிருக்கிறார். அந்த ப்ரோமோவை தற்போது படக் குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். தமிழ் திரையுலகில் பல நல்ல படங்களில் நடித்து மக்கள் மனங்களில் இடம் பிடித்திருப்பவர் நடிகர் விஷால். இவர் தற்போது வரை தமிழில் சுமார் 31 படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். 2004 ஆம் ஆண்டு செல்லமே என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமாகி பின்னர் சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை, தீராத விளையாட்டுப் பிள்ளை, அவன் இவன், பூஜை, ஆம்பள, துப்பறிவாளன், இரும்புத்திரை, சண்டக்கோழி 2, வீரமே வாகை சூடும், லத்தி போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். இதில் சில படங்களை அவரே தயாரித்தும் இருக்கிறார். விஷால் பிலிம் ஃபேக்டரி என்டர்டைன்மெண்ட் என்கிற தாயரிப்பு நிறுவனத்தையும் அவர் நடத்தி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Mark Antony படத்துக்காக வெறித்தனமாக பாடும் விஷால்.! அட்டகாசமான Video-வை வெளியிட்ட படக்குழு.! 1

விளம்பரம்

தற்போது கைவசம் மார்க் ஆண்டனி என்கிற படத்திலும் துப்பறிவாளன் பாகம் இரண்டு படத்திலும் நடித்து வருகிறார். இதில் துப்பறிவாளன் பாகம் இரண்டு படத்தை அவரே இயக்கியும் வருகிறார். இது மட்டுமல்லாமல் விஷாலின் 34-வது திரைப்படத்திலும் அவர் நடித்து வருகிறார். இந்த நிலையில் விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்தில் விஷாலுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, ரிது வர்மா, செல்வராகவன், அபிநயா, சுனில் போன்ற பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலு குட்டி படத்தொகுப்புகளை செய்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் 2021 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த படத்தை ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கிறார். படப்பிடிப்பின் போது பல விபத்துகள் நடந்து ஒரு வழியாக படம் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. படத்திலிருந்து டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

தொடர்புடையவை  நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் பழைய மற்றும் புதிய போட்டியாளர்கள்..! இடையில் மாட்டிய கோமாளிகள்..! பரபரப்பின் உச்சியில் குக் வித் கோமாளி..!

Mark Antony படத்துக்காக வெறித்தனமாக பாடும் விஷால்.! அட்டகாசமான Video-வை வெளியிட்ட படக்குழு.! 3
டீசர் வெளியாகி இரண்டு மாதங்கள் ஓடிவிட்ட நிலையில் படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வராமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று படத்தின் முதல் சிங்கிள் பாடலான அதிருதா என்கிற பாடலை டி ஆர் பாட அதை ப்ரோமோ போல படக் குழுவினர் வெளியிட்டிருந்தனர். விரைவில் அந்தப் பாட்டின் முழு வீடியோ தொகுப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இன்று ஒரு ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் அதே பாடலின் தெலுங்கு வெர்ஷனைப் பாட இயக்குனர் ஆத்விக் ரவிச்சந்திரன் ஆள் தேடிக் கொண்டிருக்கிறார். அப்போது விஷால் அங்கு வர அவரை வைத்து அந்த பாடலை பாடும்படி செய்வது போன்ற ஒரு குட்டி ப்ரோமோவை படக் குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Think Music India

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment