விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்தடுத்த திருப்பங்கள் நடந்து வரும் நிலையில் தற்போது பாக்யாவும் இனியாவுடன் இணைந்து கல்லூரிக்கு செல்ல முடிவெடுத்து இருக்கிறார். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யா தற்போது வீட்டு பிரச்சனை, தொழில் பிரச்சனை என அனைத்தையும் முடித்து தற்போது நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது மகள் இனியாவும் 600க்கு 596 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியிலேயே முதல் மாணவியாகவும் வந்திருக்கிறார். தற்போது இனியாவை கல்லூரியில் சேர்ப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இனியாவின் தந்தை கோபி அவரை பிபிஏ படிக்க சொல்ல, ஆனால் இனியா விஸ்காம் தான் படிப்பேன் என்று முடிவெடுத்து இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு வழியாக இனியா அவருக்கு பிடித்த படிப்பை தேர்ந்தெடுத்ததற்கான உரிமையை பாக்யா வழங்கி இருக்கிறார். இந்த நிலையில் இன்று வெளியாக இருக்கும் ப்ரோமோவில் பாக்யா தான் தொழில் கடன் வாங்குவதற்காக வங்கி ஒன்றை அணுகுகிறார். ஆனால் வங்கியில் அனைத்து சான்றிதழ்களும் சரியாக இருப்பதாகவும், நீங்கள் படித்த டிகிரி சான்றிதழ் மட்டும் வேண்டுமென்று கேட்கிறார். அப்போது பாக்யா தான் டிகிரி படிக்கவில்லை என்று கூற, அதற்கு வங்கி மேலாளர் என்னை மன்னித்து விடுங்கள் இது படித்த பட்டதாரி பெண்களுக்கு வழங்கப்படும் கடன் என்று கூறி அனுப்பி விடுகிறார். பின்னர் சோகத்துடன் வீட்டிற்கு வரும் பாக்யா தூங்கிக் கொண்டிருக்கும் இனியாவை எழுப்புகிறார். அப்போது எந்த வயதில் வேண்டுமானாலும் படிக்கலாம் தானே என்று அவரிடம் கேட்க, அவரும் படிக்கலாம் ஆனால் நீயும் என்னுடன் கல்லூரிக்கு வருகிறேன் என்று ஆரம்பித்து விடாதே எனக் கூறுகிறார்.

ஆனால் பாக்யாவோ கல்லூரிக்கு சென்று படிக்கும் முடிவில் இருக்கிறார். அவர் இனியாவுடன் இணைந்து கல்லூரிக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அங்கு என்னென்ன பிரச்சனைகள் ஆரம்பிக்கும்? இனியாவிற்கும் பாக்யாவுக்கும் இடையே பிரச்சனைகள் எழுமா? என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவைக் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television