படம் ரொம்ப நல்லா இருக்கு.! சந்தானத்தின் டிடி ரிட்டர்ன்ஸ் படத்தை புகழ்ந்து தள்ளிய ப்ளூ சட்டை மாறன்.!

இன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் குறித்து தற்போது ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். அவர் கூறும் பொழுது, பொதுவாகவே பேய் காமெடி படங்கள் என்றாலே லாஜிக்கும் இருக்காது, ஒரு கருமமும் இருக்காது ஆனால் இந்த படம் வித்தியாசமானது. கதை இருக்கும் படமாக இது இருக்கிறது. இந்தப் படத்தில் பேய்க்கு ஒரு ஃபேமிலி இருக்கிறது, அதற்கு பின்னால் ஒரு கதை இருக்கிறது. அதேபோல் ஹீரோ, ஹீரோயின், முனிஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன், பெப்சி விஜயன் என ஒவ்வொரு பின்னணியிலும் ஒரு கதை இருக்கிறது. அனைவரும் இணைந்து எப்படி பேய் பங்களாவில் மாட்டிக் கொள்கின்றனர் என்று அழகாக இந்த கதையை நகர்த்தி இருக்கின்றனர். தேவையில்லாத பாட்டு, காதல் காட்சிகளை போட்டு உயிரை வாங்காமல் படம் அருமையாக வந்திருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

படம் ரொம்ப நல்லா இருக்கு.! சந்தானத்தின் டிடி ரிட்டர்ன்ஸ் படத்தை புகழ்ந்து தள்ளிய ப்ளூ சட்டை மாறன்.! 1

விளம்பரம்

இரண்டாம் பாகத்தில் மொட்டை ராஜேந்திரன் காரை எடுத்துக்கொண்டு ஹீரோ செல்வது போன்ற இடத்திலிருந்து படம் வேகம் எடுக்கிறது. இரண்டாம் பாகத்தில் பல இடங்களில் குபீர் சிரிப்பு வருகிறது. பத்துக்கு பத்து ரூமில் வைத்துக் கொண்டு பெப்சி விஜயன் செய்யும் காமெடிகளும், மொட்டை ராஜேந்திரன் கதவு மேல் ஏறி உட்கார்ந்திருக்கும் காட்சிகளும் பலருக்கும் குபீர் சிரிப்பை வரவழைக்கிறது. தான் மட்டுமே ஸ்கோர் செய்ய வேண்டும் என்று நினைக்காமல் கூட நடிப்பவர்களும் ஸ்கோர் செய்ய வேண்டும் என்று நடிகர் சந்தானம் அனைவருக்கும் ஸ்பேஸ் அளித்திருக்கிறார். லொள்ளு சபா மாறனுக்கு பல இடங்களில் இடம் கிடைக்காவிட்டாலும் அவர் செய்யும் காமெடிகள் ரசிக்கும்படியாக இருந்தது. ஏதோ ஒப்பேத்தாமல் சி.ஜியை கண்ட இடத்தில் போடாமல் தேவையான இடங்களில் பயன்படுத்தி இந்த படத்தை மிக அழகாக எடுத்து இருப்பதாக ப்ளூ சட்டை கூறினார்.

தொடர்புடையவை  புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு லட்சங்களில் உதவி செய்த சன் பிக்சர்ஸ் நிறுவனம்.!

படம் ரொம்ப நல்லா இருக்கு.! சந்தானத்தின் டிடி ரிட்டர்ன்ஸ் படத்தை புகழ்ந்து தள்ளிய ப்ளூ சட்டை மாறன்.! 3

விளம்பரம்

மேலும் வழக்கமான பேய் படங்கள் எடுக்கிறேன் என்கிற பெயரில் நம் உயிரை வாங்குவது தான் இவர்களுடைய சரித்திரம். ஆனால் இந்த படமும் அப்படித்தான் இருக்கும் என்று எண்ணி போனால் இந்த படம் அதிலிருந்து வித்தியாசப்பட்டு இருக்கிறது. அவர்கள் நேரத்தையும் வேஸ்ட் செய்யாமல், நம்ம நேரத்தையும் வேஸ்ட் செய்யாமல் கலப்பலப்பாக இருக்கிறது. டபுள் மீனிங்கோ, ஆபாச காட்சிகளோ இல்லாமல் குடும்பத்துடன் சென்று ரசிக்கும் படமாக இருக்கிறது் பேய் படங்களால் நொந்து போய் இருப்பவர்கள் இந்த படத்தை தாராளமாக ஒருமுறை சென்று பார்க்கலாம் என்று அவர் தனது விமர்சனத்தை கூறினார். நீங்களும் அந்த வீடியோவைக் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Tamil Talkies

விளம்பரம்

Leave a Comment