பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த வாரிசு பட நடிகை.! 4-வது முறையாக கட்சி தாவல்.!

வாரிசு படத்தில் நடித்த பிரபல நடிகை தற்போது பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து இருக்கிறார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் தான் வாரிசு. இந்த திரைப்படத்தில் தளபதியின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ஜெயசுதா. இவர் இன்று டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு சென்று தன்னை பாஜகவில் இணைந்து கொண்டிருக்கிறார். அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த வாரிசு பட நடிகை.! 4-வது முறையாக கட்சி தாவல்.! 1

விளம்பரம்

1970 ஆம் ஆண்டு முதல் தனது திரை வாழ்க்கையை தொடங்கியவர் நடிகை ஜெய சுதா. இவர் 10 ஆண்டுகள் தெலுங்கு திரையுலகின் முக்கிய கதாநாயகியாக வலம் வந்தார் பின்னர் 2009 ஆம் ஆண்டு ராஜசேகர ரெட்டி அழைத்த காரணத்தினால் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

அந்த வருடம் நடந்த தேர்தலில் செகந்திராபாத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டு இருந்தார். மீண்டும் 2014 ஆம் ஆண்டு அதே தொகுதியில் போட்டியிட்ட அவர் தோல்வியை தழுவினர். பின்னர் காங்கிரஸிலிருந்து விலகி தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்த அவர் பெரிய அளவில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் ஒதுங்கியே இருந்தார்.்ய பின்னர் அங்கிருந்தும் விலகி 2019 ஆம் ஆண்டு தனது மகன் நிஹார் கபூருடன் இணைந்து ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

விளம்பரம்
தொடர்புடையவை  தளபதி 64 வது படத்தின் ஆக்ஷன் காட்சிக்காக டெல்லி பறந்து செல்லும் படக்குழு!!

பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த வாரிசு பட நடிகை.! 4-வது முறையாக கட்சி தாவல்.! 3

 

விளம்பரம்

தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம் ஹிந்தி என பல படங்களில் நடித்த அவர் கடைசியாக தமிழில் தளபதி விஜயுடன் இணைந்து வாரிசு படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் தளபதியின் தாயார் கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் ஜெயசுதா.

இந்த நிலையில் இன்று டெல்லி சென்ற அவர் தெலுங்கானா பாஜக பொதுச்செயலாளரான தருண் சுக் முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷான் ரெட்டி கட்சியின் துணைத் தலைவர் டி கே அருணா ஆகியோர் உடன் இருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்றுலாத்துறை அமைச்சர் ஜெயசுதாவை சந்தித்து பாஜகவில் இணையுமாறு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அவர் இன்றைய தினம் அந்த கட்சியில் இணைந்திருக்கிறார். கடந்த ஒரு வருடமாகவே பாஜகவில் இணைவதற்கு ஜெயசுதா திட்டமிட்டு இருந்ததாக தெரிகிறது. தெலுங்கானாவைச் சேர்ந்த ஜெயசுதா ஆந்திராவில் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்பதையும் தற்போது தெளிவுபடுத்தி இருக்கிறார்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment