பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் எதிர்நீச்சல் சீரியலில் தற்போது அடுத்த பரபரப்பு எழுந்திருக்கிறது. முன்னாள் போலீஸ் அதிகாரியை தேடிச் செல்லும் குணசேகரன் தனக்கு கைகள் செயலிழக்கவில்லை தான் நன்றாக இருக்கிறேன் நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறேன் என்கிற உண்மையை போட்டு உடைக்கிறார். இதனால் அந்த போலீஸ் அதிகாரியே அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார். அந்த ப்ரோமோவை தற்போது சன் தொலைக்காட்சி வெளியிட்டு இருக்கிறது. எதிர்நீச்சல் சீரியலில் அப்பத்தாவின் 40% பங்குகளை ஜீவானந்தம் தன் பெயருக்கு மாற்றிக் கொண்டார். அன்றிலிருந்து சீரியலில் அடுத்தடுத்த பிரச்சனைகள் எழுந்த வண்ணமாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது அந்த ஜீவானந்தம் யார் என்றே தெரியாத குணசேகரன் குடும்பத்தினர் சொத்து போன துயரத்தில் இருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வீட்டில் இருக்கும் அப்பத்தாவின் 40 சதவீத பங்குகளும் ஜீவானந்தத்தின் பெயருக்கு மாற்றப்பட்டிருப்பதாக ஆடிட்டர் வந்து சொன்ன நாள் தொடங்கி ஆதி குணசேகரன் நிம்மதி இல்லாமல் இருந்து வருகிறார். எப்படியாவது அந்த சொத்தை மீட்டு தன் பெயருக்கு மாற்றிவிட வேண்டும் என்று துடியாக துடித்துக் கொண்டிருக்கிறார். அதற்காக வீட்டில் இருக்கும் மருமகள்களை ஜீவானந்தத்திடம் சென்று பேசி சொத்தை மீட்டு வருமாறு அவர் நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறார். அதன் ஒரு பகுதியாக தனக்கு மாரடைப்பு ஏற்பட்டு விட்டதாகவும் தனக்கு கை வரவில்லை என்றும் நாடகமாடிக் கொண்டிருக்கிறார். மேலும் ஜீவானந்தத்தின் கதையை முடிப்பதற்காக தற்போது அவர் சென்னையில் பிரபல என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட்டாக இருந்த வளவன் என்கிற முன்னாள் போலீஸ் அதிகாரியை தேடிச் சென்றிருக்கிறார்.

அங்கு ஆரம்பத்தில் தன் கையில் அரிசி மூட்டை விழுந்து கை சுழுக்கி விட்டதாக பொய் சொல்கிறார் ஆதி குணசேகரன். தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் தன் கைக்கு எதுவும் ஆகவில்லை, நான் சும்மா நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறேன் என்று கூறுகிறார். இதைக் கேட்ட வளவன் அதிர்ச்சியில் உறைந்து போகிறார். தன்னைவிட பெரிய வில்லனாக இவர் இருப்பான் போல என்று வளவனே ஆதி குணசேகரனைப் பார்த்து ஆச்சரியத்தில் உறைந்திருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV