ப்ரியாவுக்கு லவ் லெட்டர் கொடுத்து செம்ம Cute ஆக ப்ரொபோஸ் செய்த ஜீவா..! இதோ ப்ரோமோ..!

ஈரமான ரோஜாவே தொடரின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் காவியா மற்றும் பார்த்தி இருவருக்கும் திருமணம் நடைபெறும் நிலையில், ஜீவா மற்றும் பிரியாவும் விரைவில் இணைந்து விடுவார்கள் என்று தெரிகிறது. இத்துடன் இந்த நாடகம் முடிவடையும் என்றும் தெரிகிறது. ஈரமான ரோஜாவே சீரியல் வித்தியாசமான கதைக் களத்துடன் ஆரம்பித்தது. பார்த்தி ஜீவா என்கிற அண்ணன் தம்பிகள் இருக்கிறார்கள். இதில் பார்த்திக்கு பிரியா என்கிற பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது. இதனால் மணமகனின் தம்பி ஜீவாவும், மணமகளின் தங்கை காவியாவும் காதலித்து வருகின்றனர். ஆனால் கடைசி நிமிடத்தில் அண்ணனுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த பிரியா கடத்தப்பட்டு விட்டதால் வேறு வழியில்லாமல் பார்த்தி தம்பியின் காதலியாக இருக்கும் காவியாவை திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் அவருக்கு தனது தம்பி ஜீவாவும் காவியாவும் காதலித்து வரும் விஷயமே தெரியாது. பெற்றோர்களின் வற்புறுத்தல் காரணமாக காவியாவும் இந்த திருமணத்திற்கு சம்மதிக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ப்ரியாவுக்கு லவ் லெட்டர் கொடுத்து செம்ம Cute ஆக ப்ரொபோஸ் செய்த ஜீவா..! இதோ ப்ரோமோ..! 1
ஆனால் பார்த்திக்கும் காவியாவிற்கும் திருமணம் நடந்து முடிந்த அடுத்த நிமிடம் ஜீவா தனது அண்ணனுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த பிரியாவை கண்டுபிடித்து அழைத்து வருகிறார். ஆனால் அவருக்கு திருமணம் முடிந்து விட்டதால், வேறு வழியில்லாமல் அக்கா பிரியாவை ஜீவா திருமணம் செய்து கொள்கிறார். ஆரம்பத்தில் இந்த கதை பலராலும் விமர்சிக்கப்பட்டது. திருமணத்தன்று மணப்பெண் காணாமல் போய்விட்டால் அவரது தங்கையை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைப்பீர்களா? என்றெல்லாம் விமர்சனம் எழுந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல பார்த்தி மற்றும் காவியா இருவரின் நடிப்பிற்காகவும், ஜீவா மற்றும் பிரியா இருவரின் ரொமான்ஸ் காட்சிகளுக்காகவும் இந்த நாடகம் பலராலும் விரும்பிப் பார்க்கப்பட்டது. இந்த நிலையில் அனைத்து பிரச்சனைகளும் முடிந்து தற்போது காவியா மற்றும் பார்த்தி இருவரும் மீண்டும் திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர். முதல் திருமணம் அவசரக் கதிகள் நடந்ததால் இந்த திருமணத்தை மிக பிரம்மாண்டமாக நடத்த குடும்பத்தினர் திட்டமிட்டு இருக்கின்றனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 'பாக்கியலட்சுமி' சீரியல் நடிகை.! வெளியான ஷாக்கிங் புகைப்படங்கள்.!

ப்ரியாவுக்கு லவ் லெட்டர் கொடுத்து செம்ம Cute ஆக ப்ரொபோஸ் செய்த ஜீவா..! இதோ ப்ரோமோ..! 3
இவர்களைப் போலவே வேண்டா வெறுப்பாக திருமண வாழ்க்கை நடத்திவரும் ஜீவாவும் பிரியாவும் தற்போது ஒன்றாக இணைய இருக்கின்றனர். ஜீவா பிரியாவுக்காக ஒரு லவ் லெட்டர் ஒன்றை எழுதி ஒரு குழந்தையிடம் விட்டு அதை பிரியாவிடம் கொடுக்க செய்கிறார். பிரியா இது என்ன என்று கேட்க இதில் லவ் லெட்டராகவும் எடுத்துக்கலாம், ப்ரொபோஸ் செய்யும் லெட்டராகவும் எடுத்துக்கலாம், சமாதானத்திற்கான லெட்டராகவும் எடுத்துக் கொள்ளலாம் என்று காமெடியாக கூறுகிறார். இந்த ஜோடிகளும் கணவன் மனைவியாக வாழ்க்கையை தொடங்கிய பின்பு இந்த நாடகம் முடிவடையும் என்று தெரிகிறது. இந்த நாடகத்தை இயக்கி வந்த இயக்குனர் தாய் செல்வம் மரணித்து விட்டதால் கதையை வேறு ஒரு இயக்குனர் இயக்கி வருகிறார். தற்போது கதை முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. விரைவில் ஈரமான ரோஜாவே சீரியல் முடிவடையும் என்று தெரிகிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment