பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் இனியா தனது தந்தை கோபியை வேண்டாம் என்று சொல்லிவிட்டு, தற்போது தனது தாயார் பாக்யா மற்றும் குடும்பத்தினருடன் சென்றுவிட்டார். இதனால் கோபி மருத்துவமனையில் கண் கலங்கிய வண்ணம் நின்று கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் ராதிகா கோயின் மனதை மாற்ற திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார். அவர் இனியா மற்றும் பிறர் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி கோபியின் மனதை மாற்றுவதற்காக பேசிக் கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. பாக்கியலட்சுமி சீரியலில் பல அதிரடி திருப்பங்கள் நடந்து வருகிறது. கோபி இரண்டாம் திருமணம் செய்து கொண்ட நாள் தொடங்கி இன்று வரை அவருக்கு ஏதாவது ஒரு பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது. மூத்த மனைவியின் குடும்பத்திலிருந்து யாருமே தன்னை ஆதரிக்காத போது அவரது இளைய மகள் இனியா மட்டுமே கோபியை நம்பி அவருடன் வந்து வசித்து வந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கடைக்குட்டி என்பதால் கோபிக்கும் இனியா மீது அவ்வளவு பாசம் இருந்தது. தனது தாயாருடன் ஏற்பட்ட மனக்கசப்பால் தனது தந்தையை தேடி அவரது இரண்டாவது மனைவி வீட்டில் வசித்து வந்தார் இனியா. இந்து நிலையில் இனியா தனது டியூஷன் நண்பர் ஒருவருடன் நெருங்கி பழகுவதை கோபியின் இரண்டாவது மனைவி ராதிகா விரும்பவில்லை. நடுரோட்டில் நின்று கொண்டு இனியா ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருப்பதை ராதிகா கண்டிக்கத் தொடங்கினார். அங்கிருந்து பிரச்சினை தொடங்கியது. ஒரு கட்டத்தில் கோபியும் ராதிகாவிற்கு ஆதரவாக பேச தொடங்கிய நிலையில், இனியாவிற்கு என்ன செய்வது என்று தெரியாமல் ராமமூர்த்தி தாத்தா சாப்பிட வைத்திருந்த மாத்திரைகளை எடுத்து தற்கொலை முயற்சியாக சாப்பிட்டு விடுகிறார். இதனால் அணை வீட்டில் இருந்த அனைவரும் நிலை குலைந்து போயிருந்தனர். தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு திரும்புகிறார் இனியா.

இந்த நிலையில் இனியாவை எப்படியாவது தன்னுடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்று கோபி போராடிக் கொண்டிருக்கிறார். ஆனால் இனியா கோபியுடன் செல்ல விரும்பவில்லை. அவருடன் சென்றால் எங்கு மீண்டும் ராதிகாவுடன் பிரச்சனை வருமோ என்று சொல்லி கோபியை முழுவதுமாக வெறுக்கிறார் இனியா. ராதிகா அவ்வளவு பேசும்பொழுது கூட கோபி தனக்கு எந்தவிதமான ஆதரவையும் தரவில்லையே என்று இனியாவிற்கு கோபி மீது வருத்தம் இருக்கிறது. இதனால் இனிமேல் அவருடன் செல்ல விருப்பம் இல்லாமல் பாக்யா மற்றும் அவரது குடும்பத்துடன் செல்கிறார் இனியா. அப்பொழுது கோபி என்னுடன் வா இனியா என்று கண்ணீருடன் சொல்ல முகத்தில் அடித்தார் போல கூறிவிட்டு இனியா நகர்ந்து செல்கிறார். பின்னர் வரும் ராதிகா அவர்கள் எல்லாம் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள். நீங்கள் மட்டும்தான் தனி ஆள், உங்களை அவர்கள் எல்லாருமே வெறுக்கிறார்கள் என்று கோபியின் மனதை மாற்ற முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Vijay Television