தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் தற்போது அடுத்த அதிரடியான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. சுடர் அபிக்கு பிறந்த குழந்தைதான், ஆனால் வெற்றிக்கும் அபிக்கும் பிறந்த குழந்தை இல்லை என்று புது வதந்தி கிளம்பி இருக்கிறது. இதனால் வெற்றி மனக்குழப்பத்தில் இருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் சற்று வித்தியாசமான கதையம்சத்துடன் ஒளிபரப்பாக தொடங்கியது. ரவுடியாக இருக்கும் வெற்றி கோவிலில் பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார். அப்போது கோவிலுக்கு சாமி கும்பிட வரும் அபி வெற்றியை தட்டிக் கேட்கிறார் அப்போது திடீரென அபி கழுத்தில் வெற்றி தாலி கட்டி விடுகிறார். பிரபல வழக்கறிஞராக இருக்கும் ஒருவரின் மகள் தான் அபி. ஒரு ரவுடி தன் கழுத்தில் தாலி கட்டியதை ஆரம்பத்தில் ஏற்றுக் கொள்ளாமல் இருக்கிறார். பின்பு அவருடன் தான் இணைந்து குடும்பம் நடத்துவேன், என் கழுத்தில் தாலி கட்டிய அவர்தான் எனது கணவர் என்று சொல்லி அவருடன் வசிக்க தொடங்குகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதனால் அவர் பல பிரச்சினைகளை சந்திக்கிறார். வெற்றியின் குடும்பம் ஆரம்பத்தில் அபியை ஏற்றுக்கொள்ளவில்லை. பின்பு கொஞ்சம் கொஞ்சமாக அபியை ஏற்று கொண்டார்கள். இந்த கதை முடியும் தருவாயில் இருந்தது. திடீரென கதையில் திருப்பமாக அபிக்கும் வெற்றிக்கும் பிறந்த குழந்தை சுடர் என்று ஒரு புதிய கதாபாத்திரத்தை உள்ளே திணித்தனர். மேலும் அபியை கலெக்டர் ஆகவும் மாற்றி இருந்தனர். தன் மனைவி அபிக்கும் தனக்கும் பிறந்த மகள் தான் சுடர் என்று தெரியாமலேயே வெற்றி சுடரிடம் பழகி வருகிறார் அதேபோல் சுடருக்கும் வெற்றிதான் தன்னைப் பெற்ற தந்தை என்று தெரியாமலேயே பழகி வருகின்றனர். இந்த நிலையில் சுடருக்கு தற்போது பெரிய விபத்து ஒன்று ஏற்படுகிறது. இதனால் வெற்றி பதறி அடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு வருகிறார். அங்கு வரும் அவருக்கு சுடர் அபியின் குழந்தை என்று தெரிய வருகிறது. அபியின் குழந்தை என்னும்போது அது தன்னுடைய குழந்தை தான் என்று நெகிழ்ச்சிகளில் கதறி அழுது கொண்டிருக்கிறார் வெற்றி. இந்த நிலையில் இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஒரு திருப்பம் ஏற்பட்டிருக்கிறது.

அதில் அபிக்கும் வெற்றிக்கும் பிறந்த குழந்தை சுடர் இல்லை என்றும் அபிக்கு இரண்டாவதாக வேறு ஒருவருடன் திருமணம் ஆகி அவருக்கு பிறந்த குழந்தைதான் சுடர் என்று சொல்லி வெற்றியை குழப்புகின்றனர். இதற்கு முக்கிய காரணமாக ஜூலி கதாபாத்திரம் இருக்கிறது. அவர் அபிக்கும் இன்னொருவருக்கும் திருமணம் நடந்தது போல் ஒரு போட்டோவை எடிட் செய்து வெற்றியை நம்ப வைக்கிறார். இதனால் வெற்றி சுடர் தனக்கு பிறந்த குழந்தை இல்லையா என்று குழப்பத்தில் இருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமாவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Vijay Television