படம் பாதியிலேயே ஆடியன்ஸ் பூரா கோமாவுக்கு போய்ட்டான்.! ஜெயிலர் படத்தை விமர்சித்த ப்ளூ சட்டை.!

நேற்றைக்கு வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் தற்போது தனது விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். அவர் தனது விமர்சனத்தில் கூறியதாவது, இந்த படத்தை டார்க் காமெடி படம் என்றுதான் படக்குழுவினர் ப்ரமோட் செய்தார்கள். டார்க் காமெடி என்றால் படத்தில் வருபவன் எல்லாம் சீரியஸாக ஏதாவது செய்து கொண்டிருப்பான், படம் பார்க்கும் நமக்கு சிரிப்பு வரும். ஆனால் இந்த படத்தில், வரவன் எல்லாம் காமெடி பண்ணிக் கொண்டிருக்கிறான். படம் பாக்குற நமக்கு சீரியஸ் ஆக இருக்கிறது. ஸ்கிரீன் ப்ளேவை மிக காமெடியாக இருக்கிறது, முதலில் பேரன் youtube என்று காட்டுகிறார்கள், பின்னர் சிலை கடத்தல் என்று காட்டுகிறார்கள், அதன் பின்னர் வில்லனுக்கு போகிறார்கள், அதன் பின்னர் டெல்லி, ஹைதராபாத் என்று போய் கதை எங்கெங்கயோ நகர்ந்து கொண்டிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

படம் பாதியிலேயே ஆடியன்ஸ் பூரா கோமாவுக்கு போய்ட்டான்.! ஜெயிலர் படத்தை விமர்சித்த ப்ளூ சட்டை.! 1

விளம்பரம்

அதன் பின்னர் உண்மையான வில்லனை காட்டும் பொழுது அதிர்ச்சி ஏற்பட்டது உண்மைதான். ஆனால் அதற்குள் பார்த்துக் கொண்டிருந்த ஆடியன்ஸ் அனைவரும் ஐசியூல் படுத்துவிட்டார்கள். தண்ணீர் தெளித்து கூட எழுப்ப முடியாத அளவிற்கு கோமாவிற்கு சென்று விட்டார்கள். இலக்கு இல்லாமல் இந்த கதை ஓடி முட்டு சந்தில் நின்று கொண்டிருக்கிறது. பான் இந்தியா படம் எடுக்கிறேன் என்று சொல்லி ஹிந்திக்கு ஒரு ஜாக்கி ஷெராஃப், கன்னடத்திற்கு சிவராஜ் குமார், மலையாளத்தில் மோகன்லால் என்று சொல்லி இதை பார்க்கும் பொழுது டப்பிங் படம் போல ஆகிவிட்டது. இவர்கள் எல்லாம் வாயில் சிகரெட்டை வைத்துக் கொண்டு ரெண்டு வசனம் மட்டும்தான் பேசுகிறார்கள். ஹீரோக்கு சப்போர்ட் பண்ணுகிற வில்லனை நல்ல ரவுடி போல் காட்டி இருக்கிறார்கள். ரவுடியில் ஏது நல்ல ரவுடி? கெட்ட ரவுடி? பாம்பில் ஏது நல்ல பாம்பு.? கெட்ட பாம்பு.?

தொடர்புடையவை  பிரம்மாண்ட சாதனை படைத்த சிறகடிக்க ஆசை..! விஜய் டிவியே வெளியிட்ட புகைப்படம்..!

படம் பாதியிலேயே ஆடியன்ஸ் பூரா கோமாவுக்கு போய்ட்டான்.! ஜெயிலர் படத்தை விமர்சித்த ப்ளூ சட்டை.! 3

விளம்பரம்

சூப்பர் ஸ்டாரின் மகனாக இருக்கும் போலீசை கொலை செய்து விடுகிறார்கள். ஆனால் அதை காவல்துறை டிபார்ட்மெண்டில் ஈசியாக கடந்து போகிறார்கள் இது எவ்வளவு பெரிய விஷயம், மாநிலமே ஆடிப் போய்விடும். ஆனால் அவங்க சொந்த ஃபேமிலில கூட ஒரு ரியாக்ஷனும் இல்லை. வில்லன் தான் ஸ்ட்ராங்காக இருக்கணும். ஆனால் ஒரு கட்டத்தில் ஹீரோ வில்லனை பிளாக்மெயில் செய்ய ஆரம்பிக்கிறார். படம் முழுக்க டயலாக் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. லோ பட்ஜெட்டில் எடுக்கிறேன் என்று சொல்லி இந்த படம் நன்றாக வரவில்லை. அனிருத் பாடல்களும் தமன்னாவின் நடனம் ஒரே ஒரு ஆறுதல். ஆனால் தமன்னாவின் பாடலுக்கு அனைவரும் எழுந்து ஆட்டம் போடுவார்கள் என்று பார்த்தால் அனைவரும் கையை வைத்து குத்த வைத்து உட்கார்ந்து விட்டான். உங்க அப்பன் விசில கேட்டவன், என் பட்டத்தை பறிக்க நாலு பேரு, உசுர கொடுக்க 100 பேர் என்று புலம்பல்களை பாட்டாக வைத்திருக்கிறார்கள். Youtube Video Embed Code Credits: Tamil Talkies

விளம்பரம்

அதுமட்டுமில்லாமல் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின் போது சமூக விரோதிகள் புகுந்து விட்டார்கள் என்று ரஜினிகாந்த் பேசி இருந்தார். அப்போது இருந்து தலீவருக்கு அடி விழுக ஆரம்பித்தது. கோர்ட் சம்மன் அனுப்பிய போது சமூக விரோதிகள் யார் என்று தனக்கு தெரியாது, தான் தெரியாமல் பேசி விட்டேன் என்று மன்னிப்பு கேட்டார். அதிலிருந்து இவரின் வீழ்ச்சி ஆரம்பமாகிவிட்டது. வேண்டா வெறுப்புக்கு பிள்ளை பெற்று காண்டாமிருகம் என்று பெயர் வைத்தது போல தற்போது இந்த கதையை எடுத்திருப்பதாக தனது விமர்சனங்களை முன் வைத்தார்..!

விளம்பரம்

Leave a Comment