விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த தொடருக்கென மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. முன்னணி ஹிட் தொடர்கள் வரிசையில் சிறகடிக்க ஆசை தொடரும் இணைந்து கலக்கி வருகிறது. நாளுக்கு நாள் தொடரின் சுவாரசியம் அதிகரித்து வருவதால் ரசிகர்கள் கூட்டமும் இந்த தொடருக்கு அதிகரித்து வருகிறது.

தற்போது ரோகிணியின் முதல் கல்யாணம் குறித்து தெரிந்த நபர் மனோஜிற்கு மிரட்டல் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தை அனுப்பியது முத்து என மனோஜ் தவறாக புரிந்து கொள்கிறார். இதனால் வீட்டில் இருவருக்குமிடையே சண்டை நடைபெறுகிறது. அதே சமயம், மீனா கடிதம் அனுப்பியது குறித்து சரியாக உத்தேசிக்கவே, சுதாரித்துக்கொண்ட ரோகிணி அனைவைரையும் கலைத்து செல்கிறார்.

இதனால் சீரியல் விறுவிறுப்பாக ஓடி வருகிறது.தற்போது இந்த சீரியல் 500 எபிசோடுகளை கடந்து உள்ளது.இதனை கொண்டாடும் விதமாக போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
View this post on Instagram