மகனின் 8-வது பிறந்தநாள்.! குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சினேகா பிரசன்னா தம்பதிகள்.!

நடிகை சினேகா மற்றும் பிரசன்னா தம்பதிகள் இன்று தனது மூத்த மகனின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர். அந்த அழகிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர்கள் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றனர். மலையாள படத்தின் மூலமாக திரையுலகருக்கு நடிகையாக அறிமுகமானவர் சினேகா. பின்னர் இவர் 2009 ஆம் ஆண்டு அச்சம் உண்டு அச்சமுண்டு என்கிற படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது உடன் நடித்த பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் பிரசன்னாவுடனான காதலை அறிவிக்காமல் இருந்த அவர், பின்னர் வெளிப்படையாக அறிவித்தார். 2012 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு விஹான் மற்றும் ஆதிந்த்யா என்கிற இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் மிக அழகான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் சினேகா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மகனின் 8-வது பிறந்தநாள்.! குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சினேகா பிரசன்னா தம்பதிகள்.! 1

விளம்பரம்

2020ம் ஆண்டு பட்டாசு என்கிற படத்தில் நடித்து முடித்த பின்னர் வேறு எந்த படத்திலும் கமிட்டாகாமல் இருந்து வருகிறார். மலையாளத்தில் மட்டும் கிறிஸ்டோபர் என்கிற ஒரே ஒரு படத்தில் நடித்திருந்தார். தற்போது கைவசம் அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. சில தொலைக்காட்சியில் மட்டும் அப்போது நடுவராக பங்கெடுத்து வருகிறார். அதேபோல இவரது கணவர் பிரசன்னாவும் தற்போது சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது கைவசம் கிங் ஆப் கோதா என்கிற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். மேலும் துப்பறிவாளன் பாகம் இரண்டிலும் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் சினேகா பிரசன்னா தம்பதிகளின் மூத்த மகனான விஹானுக்கு இன்று பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. தனது குடும்பத்தினருடன் கேக் வெட்டி அவர் பிறந்தநாளை கொண்டாடி அதை வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Sneha (@realactress_sneha)

விளம்பரம்

தனது மகனின் அழகிய புகைப்படங்களை பதிவிட்ட சினேகா, ‘என்னுடைய லட்டு நான் உன்னை எவ்வளவு காதலிக்கிறேன் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. என்னுடைய இதயத்தின் மகிழ்ச்சி நீ, என்னுடைய ஆன்மாவின் சொத்து. என்னுடைய சூரிய ஒளி நீ, எனக்கு அளவற்ற மகிழ்ச்சியை கொடுத்தாய், உன்னை கொடுத்ததற்கும் எனது வாழ்க்கையை அழகாக்கியதற்கும் இறைவனுக்கு நான் தினமும் நன்றி சொல்கிறேன். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கண்ணா, உன்னை நான் எவ்வளவு காதல் செய்கிறேன் என்று உனக்குத் தெரியும்” என்று பதிவிட்டு இருக்கிறார். அந்த பதிவிற்கு கீழே ராதிகா சரத்குமார், நடிகை கனிகா உள்ளிட்ட பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறி வருகின்றனர்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்

Leave a Comment