மீண்டும் அர்ஜுனின் சூழ்ச்சிக்கு பலியான கோதை.! ராகினியை வைத்து வீட்டை எழுதி வாங்கிய அர்ஜுன்.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தற்போது அர்ஜுனனின் சூழ்ச்சிக்கு கோதை மீண்டும் பலியாகியிருக்கிறார். சொத்தை பிரித்து கேட்ட ராகிணிக்கு அவர் விருப்பப்படியே சொத்தை எழுதி கொடுத்து கோதை அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார். தமிழும் சரஸ்வதியும் சீரியல் பல நாட்களாக விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. கர்ப்பமாக இருக்கும் மகள் ராகிணியும் அவரது கணவர் அர்ஜுனும் இணைந்து, கோதை குடும்பத்தை படாத பாடு படுத்தி வருகின்றனர். அர்ஜூனின் உண்மை முகம் தெரியாமல் கோதை மற்றும் ராகிணி இருவரும் அவரின் பேச்சை கேட்டுக் கொண்டு தமிழை வீட்டிலிருந்து வெளியே அனுப்பி விடுகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் அர்ஜுனின் சூழ்ச்சிக்கு பலியான கோதை.! ராகினியை வைத்து வீட்டை எழுதி வாங்கிய அர்ஜுன்.! 1

விளம்பரம்

கோதையின் மூத்த மகனும், அவருக்கு இவ்வளவு நாள் பக்க துணையாக இருந்த தமிழை அர்ஜுன் சூழ்ச்சி செய்து வீட்டில் இருந்து வெளியே அனுப்பும்படி செய்து விட்டார். வீட்டில் இருந்து வெளியேறிய தமிழ் தற்போது சரஸ்வதி இண்டஸ்டரீஸ் என்கிற நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். மேலும் அசோசியேஷன் தேர்தலிலும் நின்று வெற்றி பெற்று சேர்மன் ஆகி இருக்கிறார். தனது சொந்த காலில் நின்று காட்டுவேன் என்று சபதம் போட்ட தமிழ், அதில் வெற்றியும் பெற்று வருகிறார். ஆனால் அவரால் கோதையின் மருமகனாக இருக்கும் அர்ஜுன் கெட்டவன் என்பதை இன்றளவும் நிரூபிக்க முடியவில்லை. இதற்கிடையில் இன்று புதிய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

தொடர்புடையவை  குணசேகரனுக்கு அருகில் அமர்ந்து அழுது கொண்டிருக்கும் தம்பிகள்.! என்ன ஆச்சு அவருக்கு.?

மீண்டும் அர்ஜுனின் சூழ்ச்சிக்கு பலியான கோதை.! ராகினியை வைத்து வீட்டை எழுதி வாங்கிய அர்ஜுன்.! 3

விளம்பரம்

அதில் ராகிணியை கோதையிடம் வந்து எங்களுக்கு அண்ணா நகரில் இருக்கும் அந்த வீட்டை எழுதிக் கொடு என்று கேட்கிறார். அதிர்ந்து போன கோதை பின்னர் அண்ணாநகர் வீட்டை எழுதி தருவதாக கூறி பத்திரப்பதிவு அலுவலகத்தில் கையெழுத்து போடுகிறார். இதனால் அர்ஜுன் மற்றும் அவரது குடும்பத்தினர் சந்தோஷத்தில் உள்ளனர். கொஞ்சம் கொஞ்சமாக கோதை குடும்பம் அழிவதை பார்த்து அர்ஜூன் குடும்பத்தினர் ரசித்துக் கொண்டிருக்கின்றனர். இதை பார்த்து ரசிகர்கள் இதற்கு ஒரு எண்டே இல்லையா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment