விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் தற்போது புது வீட்டின் புதுமனை புகுவிழா நடைபெற இருக்கிறது. அந்த ப்ரோமோவை தற்போது விஜய் தொலைக்காட்சி வெளியிட்டு இருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்திருக்கும் ஒரு தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். தற்போது இந்த தொடரில் மருமகள் அனைவருக்கும் குழந்தை பிறந்திருக்கிறது. மேலும் மூத்த மருமகளாக இருக்கும் தனத்திற்கு புற்றுநோய் இருந்த காரணத்தினால் அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டிருக்கிறது. சிகிச்சை முடிந்து தற்போது அனைவரும் மீண்டும் ஒன்றாக இணைந்துள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தனத்திற்க்கு மார்பக புற்றுநோய் இருந்த செய்தியை வீட்டில் இருந்த அனைவரிடமும் மீனா மற்றும் முல்லை மறைத்து அவரை அழைத்துச் சென்று அறுவை சிகிச்சையை முடித்து இருந்தனர். இந்த காட்சிகள் சமீப காலமாக ஒளிபரப்பாகி வந்த்தால் ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்பட்டது. டிஆர்பி ரேட்டிங்கில் ஒரு கட்டத்தில் டாப்பில் இருந்து வந்த இந்த சீரியல் தற்போது ரசிகர்களுக்கு சோர்வை ஏற்படுத்தும் வண்ணம் கதை இல்லாமல் இழுவையாக நடந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் இணைந்து கட்டி வந்த வீட்டில் புதுமனை புகுவிழா தற்போது நடைபெற இருக்கிறது. இதற்காக அனைவரும் புது வீட்டிற்கு வந்திருக்கின்றனர்.

அங்கு மூர்த்தி வீட்டிற்கு பெயர் ஒன்றை வைத்து அந்த பெயர் பலகையை திரையிட்டு மூடி வைத்திருக்கிறார். தனத்திடம் அதை திறந்து பார்க்குமாறு அவர் கூறுகிறார். அதை திறந்து பார்க்கும் தனம் நெகிழ்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார். வீட்டில் உள்ள அனைவரின் ஆசைக்கு ஏற்ப “தனலட்சுமி இல்லம்” என்று தனத்தின் பெயரை வீட்டிற்கு சூட்டியிருக்கின்றனர். அதை பார்த்த உடனே கண்கலங்கி அழுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது.
YouTube Video Embed Code Credits: Vijay Television