ஆஹா கல்யாணம் தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், கௌதம் தான் ஐஸ்வர்யாவை கடத்திச் சென்று இருந்தார் என்கிற உண்மை தற்போது அனைவருக்கும் தெரிய வந்துள்ளது. சூர்யா கௌதமின் கன்னத்தில் ஓங்கி அறை விடுகிறார் அதை தாங்காமல் கௌதம் மேடையிலேயே சரிந்து கீழே விழுகிறார். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. புதிதாக ஆரம்பித்தாலும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது ஆஹா கல்யாணம். இந்த தொடரின் விறுவிறுப்புக்கு முக்கிய காரணம் கௌதம் சூர்யாவிடம் மாட்டுவானா? இல்லையா? என்கிற ஆர்வம் தான் அது தற்போது நடந்தேறியுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சூர்யாவின் சித்தி மகனாக இருக்கும் கௌதம் சூர்யாவிற்கு நிச்சயிக்கப்பட்டிருந்த ஐஸ்வர்யாவை திருமணத்தன்று கடத்திக்கொண்டு சென்று விட்டார். திருமணம் செய்து கொள்வதாக ஐஸ்வர்யாவிடம் பொய்யான வாக்குறுதி கொடுத்துவிட்டு தற்போது வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்த ஏற்பாடுகளை நடத்தி வருகிறார் கௌதம். இந்த விஷயம் சூர்யாவிற்கு தெரிய வந்தால் என்ன நடக்குமோ என்கிற பரபரப்பு எழுந்து வந்த நிலையில், சூர்யாவின் மனைவியும் ஐஸ்வர்யாவின் தங்கையுமான மஹா தற்போது தனது அக்கா ஐஸ்வர்யாவை திருமண மண்டபத்திற்கு அழைத்து வந்துவிட்டார்.

அப்போது பேசும் ஐஸ்வர்யா, “கௌதம் தான் சூர்யாவை கல்யாணம் பண்ண வேண்டாம், என்னை கல்யாணம் செய்து கொள் என்று தன்னை கடத்தி விட்டுச் சென்ற உண்மையை கூறுகிறார்.அப்போது கௌதம் இவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று சொல்ல ஆதாரம் இருக்கா என்று கேட்கிறார். அப்போது ஹோட்டல் வாசலில் கௌதம் ஐஸ்வர்யாவை அழைத்துக் கொண்டு செல்லும் சிசிடிவி காட்சியை மஹா சூர்யாவிடம் காட்டுகிறார். இதனால் கடுப்பான சூர்யா கௌதமை ஓங்கி அறை விடுகிறார். அத்துடன் இந்த ப்ரோமோ நிறைவடைகிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television