எதிர்நீச்சல் சீரியலின் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தர்ஷன் புது வண்டி வாங்கி வந்ததை பார்த்த ஞானம் கோபத்தில் தர்ஷனை போட்டு அடிக்கிறார். அப்போது அங்கு சண்டை வருகிறது. மேலும் மீண்டும் மாடியில் நின்று தர்ஷனும் தர்ஷனியும் ஜீவானந்தம் பற்றி பேசிக் கொண்டிருப்பதை கதிர் கேட்டு விடுகிறார். மேலும் அங்கும் ஒரு புது சண்டை வருகிறது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நாளுக்கு நாள் விறுவிறுப்பு அதிகமாகி வருகிறது. அந்த வகையில் இன்றைக்கு வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் தர்ஷனுக்கு ஈஸ்வரி வாங்கி கொடுத்த வண்டியை சக்தி தள்ளிக் கொண்டு வீட்டிற்கு வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அப்போது அங்கு வரும் ஞானம் இந்த வயதிலேயே உனக்கு வண்டி கேட்கிறதா? எங்கள் அப்பன் எங்களை பதிமூன்று வயதில் விட்டு விட்டு போய்விட்டார் என்று திட்டுகிறார். அப்போது அந்த ஆள் உங்களை விட்டுவிட்டு சாவடிக்கிறான் என்றால், எங்கப்பன் உயிரோடு இருந்து என்னை சாவடிக்கிறான் என்று பேசுகிறார். இதனால் கடுப்பான ஞானம் தர்ஷனை பிடித்து அடித்து வெளுக்கிறார். இதனால் சண்டை பெரிதாகிறது. பின்னர் தர்ஷன் தனது தங்கை தர்ஷனியிடம் இன்று நாங்கள் ஜீவானந்தத்தை சென்று சந்தித்தோம் என்று கூறுகிறார். அப்போது அதை கதிர் கேட்டுவிட்டு தர்ஷனை கோபத்தில் திட்டுகிறார். மேலும் ஈஸ்வரியிடமும் கதிர் சண்டைக்கு போகிறார்.

ஜீவானந்தத்தை பற்றி பிள்ளைகளிடம் சொல்லி பிள்ளைகளின் மனதை மாற்ற முயற்சிக்கிறாயா? என்று சொல்லி ஈஸ்வரியிடமும் கோபத்தில் கத்துகிறார். அப்போது ஈஸ்வரி எங்களுக்கு முடிவு எடுக்கும் எல்லா உரிமையும் உண்டு என்று கூறுகிறார். இதனால் வீட்டில் அடுத்தடுத்து சண்டை வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV