இந்த மாதிரி சமயத்துல நீங்க ராகிணி பக்கத்துல இருக்கனும்.! கோதையை அழைக்கும் அர்ஜுன். !

தன் மனைவிக்கு நடக்க இருக்கும் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு அழைப்பதற்காக அர்ஜுன் மற்றும் அவரது மாமா இருவரும் இணைந்து கோதையின் வீட்டிற்கு தற்போது வருகை தந்திருக்கின்றனர். அர்ஜுனனின் பேச்சை கோதை நம்புவது போல் தெரிகிறது. இதனால் தனது மகளுக்காக மனம் மாறுவாரா கோதை என்பது எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘தமிழும் சரஸ்வதியும்’ தொடர் விறுவிறுப்பான கட்டங்களை எட்டி வருகிறது. தற்போது கதைப்படி கோதை மற்றும் குடும்பத்தை அர்ஜூன் சதி செய்து வீட்டிலிருந்து விரட்டி அடிக்கும்படி செய்து விட்டார். இதனால் குடும்பத்தினர் அனைவரும் தமிழின் வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாதிரி சமயத்துல நீங்க ராகிணி பக்கத்துல இருக்கனும்.! கோதையை அழைக்கும் அர்ஜுன். ! 1

விளம்பரம்

இந்த நிலையில் இன்று வெளியாக இருக்கும் ப்ரோமோவில் ராகிணிக்கு எட்டாம் மாதம் முடிவடையிருப்பதால் ஒன்பதாவது மாத வளைகாப்பு நடத்த மாமியார் உட்பட அனைவரும் பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது ராகிணி தனக்கு தன் தாய் அருகில் இருக்க வேண்டும் என்பது போல இருப்பதாக கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால் அர்ஜுனனின் தாயார் இதற்கு சம்மதிக்கவில்லை. ராகிணியை திட்டிவிட்டு அவர் சென்று விடுகிறார். ஆனால் அர்ஜுனோ ராகிணியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக கோதையின் வீட்டிற்கு சென்று கோதையை வளைகாப்பிற்கு அழைக்கிறார்.

தொடர்புடையவை  கல்யாண மண்டபம்ன்னு நினைச்சிட்டு வந்தியா? English-ல் பேசி பாக்யாவை அசிங்கப்படுத்திய ராதிகா.!

இந்த மாதிரி சமயத்துல நீங்க ராகிணி பக்கத்துல இருக்கனும்.! கோதையை அழைக்கும் அர்ஜுன். ! 3

விளம்பரம்

இதைக் கேட்ட கோதை மனம் மாறியது போல தெரிகிறது. இதனால் அஒர் அடுத்து என்ன முடிவெடுக்க போகிறார்? மகள் மீது இருக்கும் பாசத்தில் அவர் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வருவாரா.? என்பது தெரியவில்லை. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண.. கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment