பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் பாக்கியலட்சுமியிடம் ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்டு மிகவும் அசிங்கப்படுத்துகிறார் ராதிகா. ஆனால் அந்த வேலையை கொடுத்த கம்பெனி ஓனர் உங்களை கேள்வி தான் கேட்க சொன்னேன் பாக்யாவை மிரட்ட சொல்லவில்லை என்று ராதிகாவை அடக்கி வைக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. ஆங்கிலத்தில் பதில் சொல்ல தெரியாமல் பாக்யா திணறும் காட்சிகள் நெஞ்சை ஏதோ செய்கிறது. பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவிற்கு கைவிட்டுப் போன ஐடி கம்பெனி கேண்டீன் காண்ட்ராக்ட் தற்போது மீண்டும் கிடைத்து இருக்கிறது. இதனால் பாக்கியா ஏகத்துக்கும் குஷியில் இருக்கிறார். திருமண மண்டபத்தில் ஆர்டர்கள் வாங்கி பலருக்கு உணவு சமைத்து அதன் மூலமாக வருமானம் பார்த்து வருகிறார் பாக்யா. இதனால்தான் பாக்யாவின் குடும்பம் ஒரு அளவிற்கு ஓடிக் கொண்டிருக்கிறது. மூத்த மகன் எழில் வீட்டிற்கு எந்த உதவியும் செய்வதில்லை. இளைய மகன் எழிலுக்கு சரியான வேலை அமையவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கணவரும் வீட்டிற்கு 70 லட்ச ரூபாய் கொடுத்து வாங்கிக் கொள்ளுமாறு ஒரு பக்கம் வற்புறுத்துகிறார். இந்த நிலையில் செய்வது அறியாமல் இருந்த பாக்யாவிற்கு திருமண மண்டபத்தின் ஓனர் 8 லட்ச ரூபாய் கடன் கொடுத்து பாத்திரங்கள் அனைத்தும் வாங்கி ஒரு ஐடி கம்பெனியின் கேண்டீன் கான்டிராக்டையும் எடுத்துக் கொடுக்கிறார். ஆனால் இறுதி நிமிடத்தில் அந்த கான்டிராக்ட்டை கெடுத்து விடுகிறார் ராதிகா. இதனால் நிலைகுலைந்து போயிருந்த பாக்யா மீண்டும் திருமணங்களில் சமைத்து அந்த ஆர்டர்கள் மூலமாக வருமானம் பார்த்து வந்தார். இதற்கிடையில் அந்த ஐடி கம்பெனி இன்னொரு ஹோட்டலுக்கு கேண்டின் ஆர்டரை விட்டிருந்தது. ஆனால் அந்த உணவு நன்றாக இல்லாத காரணத்தினால் கம்பெனியில் வேலை பார்த்த பலருக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் மீண்டும் கேன்டீன் ஆர்டரை பாக்யாவிற்கே கொடுக்க அந்த கம்பெனியின் ஓனர் திட்டமிட்டு இருந்தார். இதனால் மீண்டும் காண்ட்ராக்ட் விடப்பட்டிருந்தது. இந்த காண்ட்ராக்டில் கலந்து கொண்டுள்ள பாக்யாவிற்கு அந்த வாய்ப்பு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் பாக்யாவிற்கு இந்த கான்ட்ராக்ட் கிடைத்தது பாக்யா கணவரின் இரண்டாவது மனைவியான ராதிகாவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதனால் பாக்யாவை எப்படியாவது அசிங்கப்படுத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார் ராதிகா. அதற்காக தற்போது கான்ட்ராக்ட் கிடைத்த பின்பும் ராதிகாவிடம் கேள்வி கேட்கிறேன் என்கிற பெயரில் ஆங்கிலத்தில் பல கேள்விகள் கேட்கிறார். எப்படி உங்களால் குறைந்த விலைக்கு கொடுக்க முடிந்தது? இது திருமண ஆர்டர்கள் போல் கிடையாது, தினமும் குறைந்தது 2000 பேருக்கு மேல் சமைக்க வேண்டும் இதெல்லாம் உங்களால் செய்ய முடியுமா என்ற கேள்வி எல்லாம் ஆங்கிலத்தில் கேட்டு பாக்கியாவை சங்கடத்திற்கு உள்ளாக்குகிறார் ராதிகா. இதை பார்த்த அந்த கம்பெனி ஓனர் ராதிகா உங்களைக் கேள்விதான் கேட்க சொன்னேன், நீங்கள் ஏன் இப்படி மிரட்டுகிறீர்கள்? என்று பாக்யாவிற்காக ஆதரவாக பேசுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television