பிக்பாஸ் வருகையால் இரண்டு சீரியல்களின் நேரத்தை அதிரடியாக மாற்றி அமைத்த விஜய் டிவி.!

பிக்பாஸ் வருகையால் பல சீரியல்களின் நேரத்தை ஏற்கனவே விஜய் டிவி மாற்றி அமைத்து இருந்த நிலையில் தற்போது மீண்டும் இரண்டு சீரியல்களின் நேரத்தை அதிரடியாக மாற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ப்ரோமாவை வெளியிட்டு இந்த தகவலை உறுதி செய்து இருக்கிறது விஜய் டிவி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே 2 தொடரும் கிழக்கு வாசல் தொடரும் அதிரடியாக நேர மாற்றம் செய்யப்படுள்ளன. குறிப்பாக ஈரமான ரோஜாவே தொடர் இரண்டு முறை நேர மாற்றத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த ஈரமான ரோஜாவே தொடரை இரவு 9 மணிக்கு நேரம் மாற்றியிருந்தனர். தற்போது அதையும் மாற்றி மதியம் ஒரு மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் வருகையால் இரண்டு சீரியல்களின் நேரத்தை அதிரடியாக மாற்றி அமைத்த விஜய் டிவி.! 1
அடுத்தபடியாக புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கிழக்கு வாசல் சீரியலின் நேரத்தையும் மாற்றி அமைத்துள்ளனர். ராதிகாவின் ராடன் மீடியா நிறுவனம் தயாரிக்கும் இந்த நாடகத்தில் முன்னணி நடிகர்கள் பலர் நடித்து வருகின்றனர். குறிப்பாக விஜயின் தந்தையும் இயக்குனருமான எஸ்ஏசி முக்கியமான ரோலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கிழக்கு வாசல் சீரியலை இரவு 10 மணியிலிருந்து மதியம் நான்கு மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் மதிய தொடர்கள் மதியம் ஒரு மணிக்கு தொடங்கி மூன்று மணியுடன் நிறைவடைவது வழக்கமாக இருக்கிறது. மூன்று மணிக்கு மேல் அனைவரும் டிவியை அணைத்துவிட்டு செல்வதுதான் வழக்கமாக இருந்து வருகிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  நீ என் கூட இருக்கவே கூடாது..! நடு ரோட்டில் வைத்து ஸ்ரீநிதி மற்றும் நக்ஷத்திரா செய்த ரீல்ஸ் வீடியோ.!

இதனால் மூன்று மணிக்கு பின்னர் படங்களை ஒளிபரப்புவது, சீரியல்களின் மறுஒளிபரப்பு என்று நடந்து வரும் நிலையில் தற்போது அந்த நேரத்தில் கிழக்கு வாசல் சீரியலை ஒளிபரப்பதால் எஸ்ஏசி உள்ளிட்டோர் கோபத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் சீரியலை விட்டு வெளியேறுவார் என்கிற தகவலும் சமீபத்தில் வெளியானது. என்ன நடக்க இருக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment