சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலின இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் சக்தி கொடுத்த புகாரின் பேரில் ஞானத்தையும் கதிரையும் போலீசார் கைது செய்து தரதரவென்று இழுத்து சென்றனர். பின்னர் விசாலாட்சி எனது குடியை கெடுக்க வந்தவர்கள் என மருமகள்களை திட்டிக் கொண்டிருக்கிறார்் அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. இன்றைய ப்ரோமோவை பலரும் எதிர்பார்த்து காத்து இருந்தனர். ஆனால் ப்ரோமோ மிக தாமதமாக வெளியாகி உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வீட்டை விட்டு காணாமல் போன ஆதி குணசேகரனை கதிர் தான் ஏதோ செய்து விட்டார் என்று ஜனனியும் சக்தியும் சந்தேகிக்கின்றனர். இதனால் கதிர் மீதும் ஞானத்தின் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இதற்காக வீடு தேடி வரும் காவல்துறையிடம் கதிரும் ஞானமும் திமிராக பதிலளித்துக் கொண்டிருக்கின்றனர். ஆதி குணசேகரன் ஊருக்கு சென்றிருப்பதாகவும் இரண்டு நாட்களில் வந்து விடுவார் என்றும் கூறினர். இதை நம்பாத போலீசார் தற்போது இருவரையும் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். குறுக்கே புகுந்த கரிகாலனையும் அழைத்துச் செல்ல முற்பட்டு பின்னர் அவரை விட்டு விட்டு சென்றனர்.

பின்னர் விசாலாட்சி தனது மகன் சக்தியிடம் என்ன காரியம் செய்து விட்டாய்? என்று கூற சக்தியோ அண்ணன் நாளை வந்து விடுவார் என்று கூறினார்கள். ஆனால் அவர் இன்னமும் வரவில்லை. அதனால் தான நான் புகார் அளித்தேன் என்று கூறுகிறார். பின்னர் விசாலாட்சி மருமகளை பார்த்து என் குடியை கெடுக்க வந்தவர்கள் என திட்டுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாக இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV