விஜய் டிவியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். தற்போது இது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த சீரியலில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் விக்ரம் பிக்பாஸிற்கு சென்றிருக்கிறார். அவருடன் கடைசி நாள் ஷூட்டிங்கில் எடுத்துக்கொண்ட வீடியோவை உடன் நடிக்கும் வி.ஜே தீபிகா வெளியிட்டு இருக்கிறார். சீரியல் கதைப்படி தன்னுடைய அப்பா ஜனார்த்தனன் மருத்துவமனையில் இருப்பதற்கு கதிர் தான் காரணம் என்று மீனா நம்பிக் கொண்டிருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜனார்த்தனன் இரண்டாவது மகனாக இருக்கும் பிரசாந்த் மாமனாரை கத்தியால் குத்தியது கதிரும் ஜீவாவும் தான் என பொய் சொல்கிறார். இதை மீனாவும் நம்பிக் கொண்டிருக்கிறார். இதனால் ஜனார்த்தனன் கண்விழித்து உண்மையை கூறினால் பிரசாந்தின் உண்மை முகம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீனா மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துடன் இணைவதுடன் இந்த சீரியல் முடிவுக்கு வரும் என்றே தெரிகிறது. முடிவு கட்டங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக கண்ணன் ரோலில் நடித்த சரவணன் விக்ரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இணைந்துள்ளார். இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இவருடன் நடிக்கும் வி.ஜே தீபிகா ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் கண்ணனுடன் எடுத்துக் கொண்ட கடைசி நாள் ஷூட்டிங் வீடியோவை வெளியிட்டு, “உன்னை மிகவும் மிஸ் செய்வேன் பையா சரவணன் விக்ரம்” என்று அதை பகிர்ந்து இருக்கிறார். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விரைவில் முடிவுக்கு வரும் என்று தெரிகிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O