சூப்பர் சிங்கர் பிரபலம், பின்னணி பாடகி ராஜலக்ஷ்மியின் பிறந்தநாள் புகைப்படங்கள்.!

சூப்பர் சிங்கரில் கலந்து கொண்டு பலரின் உள்ளங்களை கொள்ளை கொண்ட ஒரு தம்பதிகள் தான் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தமிழகமே போராடிக் கொண்டிருந்தபோது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ராஜலக்ஷ்மி அந்த போராட்டத்தில் கலந்து கொண்டு திட்டத்தை எதிர்த்து பாடல்கள் பாடியதன் மூலமாக பிரபலமானார்.

சூப்பர் சிங்கர் பிரபலம், பின்னணி பாடகி ராஜலக்ஷ்மியின் பிறந்தநாள் புகைப்படங்கள்.! 1

விளம்பரம்

கிராமிய பாடல்களை தமிழகமெங்கும் உள்ள மூலை முடுக்கு எங்கும் கொண்டு சேர்த்த பெருமை இவர்கள் இருவருக்கும் உண்டு.

சூப்பர் சிங்கர் பிரபலம், பின்னணி பாடகி ராஜலக்ஷ்மியின் பிறந்தநாள் புகைப்படங்கள்.! 3

விளம்பரம்

மேடைக் கச்சேரிகள், கோயில் திருவிழாக்கள் என பல இடங்களில் கிராமிய பாடல்களை கொண்டு சேர்த்த இந்த தம்பதிகளுக்கு மிகப்பெரிய பரிசாக கிடைத்தது தான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. சூப்பர் சிங்கர் சீனியரில் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி ஆகிய இருவரும் கலந்து கொண்டனர்.

சூப்பர் சிங்கர் பிரபலம், பின்னணி பாடகி ராஜலக்ஷ்மியின் பிறந்தநாள் புகைப்படங்கள்.! 5

விளம்பரம்

 

அந்த சீசனின் வெற்றியாளராக செந்தில் கணேஷ் வந்தார். செந்தில் கணேஷ் “என்ன புள்ள..” என்ற பாடலை பாடியிருக்கிறார். ராஜலட்சுமி “வாயா சாமி..” என்கிற பாடலை பாடியிருக்கிறார். இந்த பாடல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளில் வெளிவந்த போதிலும் ராஜலட்சுமி பாடிய தமிழ் பாடலே உலகம் எங்கிலும் மிகப் பிரபலமானது.

விளம்பரம்
தொடர்புடையவை  நைட் ஆனா வாழைப் பழத்தை திருடி திங்கிறாரு.! அசீம் மீது காமெடியாக வழக்கு தொடுத்த தனம்.!

சூப்பர் சிங்கர் பிரபலம், பின்னணி பாடகி ராஜலக்ஷ்மியின் பிறந்தநாள் புகைப்படங்கள்.! 7

இருவரும் தற்போது பல படங்களில் பின்னணி பாடி வருகின்றனர். ‘லைசன்ஸ்’ என்ற படத்தில் கதாநாயகியாகவும் ராஜலக்ஷ்மி நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில் ராஜலக்ஷ்மி இன்று பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

விளம்பரம்

சூப்பர் சிங்கர் பிரபலம், பின்னணி பாடகி ராஜலக்ஷ்மியின் பிறந்தநாள் புகைப்படங்கள்.! 9

அவரது கணவர் செந்தில் கணேஷ், ராஜலக்ஷ்மியுடன் எடுத்துக்கொண்ட அழகிய படங்களை பகிர்ந்து, “எல்லா நலமும் வளமும் கொடுக்க இறைவனை வேண்டுகிறேன். ஈருடல் ஓருயிராய் என்னுள் கலந்த என்னவளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என வாழ்த்தியுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment