பின்னர் இவர் அபியும் நானும் என்கிற படத்தின் மூலமாக தமிழில் நடிகராக அறிமுகமானவர் கணேஷ் வெங்கட்ராமன். இவருக்கு தற்போது இரண்டாவதாக குழந்தை பிறந்து இருக்கும் செய்தியை தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்து உள்ளார். வெள்ளித்திரையில் மட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் மாயாவி 3-டி என்னும் ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி மூலமாக அறிமுகமானார் கணேஷ்.

பின்னர் தமிழில் தீயா வேலை செய்யணும் குமாரு, இவன் வேற மாதிரி, தனி ஒருவன் ஆகிய பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

இது மட்டுமல்லாமல் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருந்தார் கணேஷ். ஆனால் இந்த நிகழ்ச்சியில் போதிய ஆதரவு இல்லாத காரணத்தினால் பாதியிலேயே வெளியேறினார். கணேஷுக்கும் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்த நிஷாவுக்கும் 2015 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. நிஷா ஏற்கனவே நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை சீரியலிலும் நடித்து புகழ்பெற்றவர். இவர்கள் இருவருக்கும் முதலில் பெண் குழந்தை பிறந்திருந்தது.

சமீபத்தில் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் செய்தியை சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்தார் நிஷா. கர்ப்பமாக இருக்கும் தனது மனைவிக்கு வீட்டிலேயே எளிமையான முறையில் வளைகாப்பு நடத்தியிருந்தார் கணேஷ் வெங்கட்ராமன். இந்த நிலையில் அந்த தம்பதிகளுக்கு இரண்டாவதாக மகன் பிறந்து இருக்கும் செய்தியை புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்துள்ளார் கணேஷ். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
View this post on Instagram