முதல் முறையாக முத்துவுக்காக பரிந்து பேசிய விஜயா.! தாயின் அன்புக்காக ஏங்கும் முத்து.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் எதிர்பாராத பல திருப்பங்கள் நடந்து வரும் நிலையில் தற்போது விஜயா முத்துவுக்காக பரிந்து பேசி இருப்பதால் தனது தாயார் மீது முத்துவிற்கு பாசம் வந்திருக்கிறது. அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் அடுத்து என்ன நடக்கும் என்றே கணிக்க முடியாத அளவிற்கு பல திருப்பங்கள் நடந்து வருகிறது. அந்த வகையில் ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் முதல் இடத்தைப் பெற்று இருக்கிறது. தற்போது இந்த சீரியல் கதைப்படி முத்துவின் கடைசி தம்பியாக இருக்கும் ரவி தனது காதலியை திருமணம் செய்து கொள்கிறார். இதனால் மனமுடைந்து போன முத்துவின் தந்தை அண்ணாமலைக்கு இதய செயலிழப்பு ஏற்படுகிறது. அறுவை சிகிச்சை செய்து தனது தந்தையை காப்பாற்றி இருக்கிறார் முத்து. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக முத்துவுக்காக பரிந்து பேசிய விஜயா.! தாயின் அன்புக்காக ஏங்கும் முத்து.! 1
தனது தந்தையின் அறுவை சிகிச்சைக்காக தனது காரை விற்று தந்தையை காப்பாற்றுகிறார் முத்து. இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட அண்ணாமலை, தனது மகனுக்காக வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து காரை மீட்டுக் கொடுக்கிறார். இதனால் பழைய கசப்புகளை மறந்து முத்து மற்றும் மீனா இருவரும் ஒன்றாக இணைந்து இருக்கின்றனர். முத்து மீனாவை அழைத்துக் கொண்டு வெளியில் செல்கிறார். அப்போது கோயிலுக்கு செல்லும் அவர்கள், மனைவியை தூக்கிக் கொண்டு கணவன் மலையேறி செல்ல வேண்டும் என்று மீனாவின் வேண்டுதலால், மீனாவை தூக்கிக் கொண்டு கோயிலுக்கு மலை ஏறி செல்கிறார். அப்போது அவருக்கு கை கால்களில் மிகுந்த வலி ஏற்படுகிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  ரொம்ப உடைஞ்சு போய்ட்டேன் சார்..கலங்கிய பாலா..ஆறுதல் சொன்ன சிம்பு | BiggBoss Ultimate

முதல் முறையாக முத்துவுக்காக பரிந்து பேசிய விஜயா.! தாயின் அன்புக்காக ஏங்கும் முத்து.! 3

தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மீனா முத்துவின் கை கால்களை அமுக்கிவிட்டு அவர் முதுகில் ஏறி நின்று கொண்டிருக்கிறார். அப்போது வலி தாங்க முடியாமல் முத்து கத்தத் தொடங்குகிறார் இதை பார்த்து அங்கு ஓடிவரும் விஜயா எதற்காக அவன் மீது ஏறி இப்படி மிதித்து கொண்டிருக்கிறாய்? என்று மீனாவை திட்டி விட்டு செல்கிறார். இதை பார்த்து நெகிழ்ந்து போன முத்து, “என் தாயாருக்கு என் மேல் பாசம் இருக்கும் போல, நான் கத்திய உடனையே எப்படி ஓடி வந்தார் பார்” என்று மீனாவிடம் கண்லங்கி கூறிக் கொண்டிருக்கிறார். அந்த நெகிழ்ச்சியான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment