சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘80ஸ் பில்டப்’ திரைப்படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார். அவர் கூறியதாவது, “இந்த படத்தில் ஹீரோவுக்கும், ஹீரோவின் தங்கைக்கும் எப்போதும் சண்டை வந்து கொண்டே இருக்கிறது. ஒரு சமயம் ஹீரோவின் தாத்தா இறந்து விடுகிறார். அந்த நேரம் ஹீரோயின் அந்த இறப்பிற்கு வருகிறார். அவரைப் பார்த்த ஹீரோ அவர் மீது காதலில் விழுகிறார். அப்போது அவரின் தங்கை, ‘தாத்தாவின் பிணத்தை எடுப்பதற்குள் அந்த பொண்ணை உனக்கு ஐ லவ் யூ சொல்ல வை’ என்று பந்தயம் கட்டுகிறார். அதன் பின்னர் என்ன நடந்தது? என்பதுதான் படத்தின் மீதிக் கதை. இதை ஒட்டி ஆறு கிளைக் கதைகள் இருக்கிறது. ஆனால் அந்த கிளைக் கதைகளும் இதோட கேவலமாக இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

படம் முழுவதும் கமல் ரசிகனாக சந்தானம் வருகிறார். ஆனால் ரஜினி செய்வது போல குரங்கு சேட்டைகளை செய்கிறார். கதை எங்கெங்கயோ போகிறது. எமதர்மா ராஜா கேங் வந்து தேவையில்லாமல் உட்கார்ந்து இருக்கிறது. ஆனந்தராஜ் பொம்பளை கெட்டப்பில் வருகிறார். அவர் இன்னும் எத்தனை படத்திற்கு இப்படி நடிப்பார் என்று தெரியவில்லை. இது மிகவும் அருவருப்பாக இருக்கிறது. பல காமெடி நடிகர்கள் இருந்தபோதும் வழவழவென்று பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அருவையாக இருந்தது. ஒரு காமெடி கூட ரசிக்க முடியவில்லை. 1980களில் இந்த படம் வந்திருந்தால் கூட யாரையும் சிரிக்க வைத்திருக்க முடியாது. இது ஒரு மொக்க படம். தம் கட்டி பார்க்க வேண்டும்.

அப்படி உங்களால் தம் கட்டி பார்க்க முடியவில்லை என்றால் இரண்டு ஃபோனையும், ஹெட்போனையும் சார்ஜ் செய்து எடுத்துக்கொண்டு அந்த சமயம் யூடியூபில் முக்கிய வீடியோக்கள், முக்கிய செய்திகளை பார்த்து விடுங்கள். இல்லை என்றால் அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்து ஸ்கிரீனை பாதியாக பிரித்து ஒரு பக்கம் படமும், இன்னொரு பக்கம் யூட்யூபும் ஒளிபரப்ப வேண்டி நாம் மனு கொடுக்கலாம்” என்று வழக்கமான தனது பாணியில் கலாய்த்துத் தள்ளினார். அவரின் முழு வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Tamil Talkies