பிக் பாஸ் சீசன் 7ல் இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் பூர்ணிமா தனக்கு நேர்ந்த நாமினேஷன் குறித்து அழுது கொண்டு மாயாவிடம் பேசிக்கொண்டிருக்கிறார். நேற்றைய தினம் பிக் பாஸில் வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே வந்ததிலிருந்து ஆட்டம் தலைகீழாக மாறியிருக்கிறது. பூர்ணிமா மற்றும் மாயா இருவரின் நட்பை அனைவரும் மேற்கோள் காட்டி பேசிய நிலையில், தற்போது இவர்கள் இருவரும் எதிரே துருவங்களாக மாறும் நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர். மாயா பூர்ணிமா இடையே எப்போது சண்டை வரும் காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோ மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை நடைபெற்ற ஓபன் நாமினேஷனில் பலரும் விக்ரமுக்கு வாக்களித்தனர். தொடர்ந்து ஜோவிகா, அனன்யா, விசித்ரா, மணி, பூர்ணிமா கூல் சுரேஷ், தினேஷ் ஆகியோர் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளனர். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக மாயா எழுந்து பூர்ணிமாவை நாமினேட் செய்ததை பூர்ணிமாவே எதிர்பார்க்கவில்லை. மாயா பூர்ணிமாவின் பெயரை சொன்னவுடன் அதை எதிர்பார்க்காத பூர்ணிமா அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். தொடர்ந்து தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் விஜய் மற்றும் அனன்யா கூறிய காரணங்களால், தன்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று கூறி கண்ணீர் விட்டு அழுகிறார்.

அவரை மாயா எவ்வளவோ சமாதானம் செய்கிறார். இந்த வாரம் தான் நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்று சொல்லி அவரை சமாதானம் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் அதற்கெல்லாம் மயங்காத பூர்ணிமா கண்ணீர் விட்டு அழுது கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ளது வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television