‘மெட்டி ஒலி’ தனத்தை ஞாபகம் இருக்கா.? 10 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே முடங்கிய சோகம்.!

சின்னத்திரை உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய தொடர் ஒன்று சொன்னால் அது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மெட்டி ஒலி’ தொடர்தான் ஆண்களை கூட சீரியல் பார்க்க வைத்த பெருமை இந்த தொடரையே சேரும். பல வருடங்கள் கடந்த போதிலும் இந்த தொடரின் டைட்டில் பாடல் முதற்கொண்டு இதில் நடித்த பல நடிகர்களும் ரசிகர்களின் ஃபேவரைட்டாக இருந்து வருகின்றனர். ஐந்து பெண்களுக்கு தகப்பனாக இருக்கும் ஒரு தந்தை மகள்களை திருமணம் செய்து கொடுக்கும் இடத்தில் எவ்வளவு கஷ்டப்படுகிறார் என்பது குறித்த ஒரு பாச போராட்டம் தான் இந்த கதையின் மையக்கரு. ஐந்து பெண்களுக்கும் அப்பாவுக்கும் இடையிலான பந்தம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும், கூட்டுக் குடும்பத்தின் அருமை குறித்தும் பல ஆண்டுகளுக்கு முன்பே உரக்கக் கூடிய ஒரு தொடர்தான் மெட்டிஒலி.

'மெட்டி ஒலி' தனத்தை ஞாபகம் இருக்கா.? 10 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே முடங்கிய சோகம்.! 1
இந்த சீரியலில் ஐந்து பெண்களில் மூத்த மகளாக நடித்தவர் நடிகை காவேரி. ‘வைகாசி பொறந்தாச்சு’ என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு வந்தார். அதன் பின்னர் ரம்யா கிருஷ்ணனின் ‘வம்சம்’ சீரியலில் நடித்த அவர் சில ஆண்டுகளாக திரைத் துறையில் இருந்து விலகி இருக்கிறார். தற்போது இவரின் சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு திரையில் தோன்றி பேட்டி ஒன்றையும் அளித்திருக்கிறார். அதில், “‘வம்சம்’ நாடகம் முடிந்த கையோடு தனது தாயார் இறந்து இறந்துவிட்டார்/ அப்போதுதான் தனக்கு திருமணமும் முடிந்திருந்தது. அதனால் தனக்கு நிறைய டிப்ரஷன் வந்து விட்டது. அதனால் வீட்டிற்குள்ளேயே முடங்கி விட்டேன். ஊட்டி, கிருஷ்ணகிரி போன்ற நிறைய ஊரில் வாழ்ந்து வந்தோம். பிறகு வேலைக்காக ஒரு வாரத்திற்கு சென்னை வந்தோம்.

விளம்பரம்
தொடர்புடையவை  பாரதி கண்ணம்மாவை பங்கமாக கலாய்த்து விட்டாரா பாக்யா.? கிளப்பிட்ட ரசிகர்கள்.. என்ன சேதின்னு தெரியுமா?

'மெட்டி ஒலி' தனத்தை ஞாபகம் இருக்கா.? 10 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே முடங்கிய சோகம்.! 3
ஆனால் என்னுடைய அண்ணன் அந்த சமயம் பார்த்து இறந்துவிட்டார். அதன் பின்னர் ஒன்றரை வருடங்கள் இங்கேயே இருக்கும் நிலை வந்து விட்டது. எனக்கு தைராய்டு வந்துவிட்டது. நிறைய மாத்திரை சாப்பிட்டேன். அதனால் உடல் எடையும் கூடி விட்டது. பின்பு ஒரு கட்டத்தில் மாத்திரையை நிறுத்தியதால் உடல் எடை வெகுவாக குறைந்து விட்டது. என்ன செய்தாலும் எடை ஏறவில்லை. சமுத்திரக்கனி, விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி, நயன்தாரா போன்றவர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை. என்னுடைய நண்பர்கள் யாருடனும் என்னுடன் பேசுவதில்லை. நானும் யார் வீட்டிற்கும் செல்வதில்லை. அவர்களும் என் வீட்டிற்கு வருவதில்லை.

'மெட்டி ஒலி' தனத்தை ஞாபகம் இருக்கா.? 10 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே முடங்கிய சோகம்.! 5

விளம்பரம்

எனக்கு தங்கையாக நடித்து இருந்த விஜய் இறந்த விஷயம் கூட எனக்கு இரண்டு நாட்கள் கழித்து தான் தெரியும். பத்து ஆண்டுகளாக வீட்டிற்குள்ளே தான் முடங்கி இருக்கிறேன். ‘மெட்டி ஒலி’ இரண்டாம் பாகம் எடுக்கப்படுவது குறித்து தனக்கு எந்த தகவலும் சொல்லப்படவில்லை” என பேசி இருந்தார். அவரின் சமீபத்திய பேட்டியும் அவரின் உருவத்தோற்றமும் ரசிகர்கள் பலரையும் கலங்க வைத்திருக்கிறது. நன்றாக நடிப்பார், எமோஷனல் காட்சிகளில் பார்ப்பவர்களையும் கலங்க வைத்துவிடுவார் அவரின் நிலை இப்படி பரிதாபகரமாக இருக்கிறது என்று சொல்லி ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அவரின் முழுப் பேட்டியை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Aval Vikatan

விளம்பரம்

Leave a Comment