பிளே பாயாக மாறி லீலைகள் செய்யும் அசோக் செல்வன்.! ‘சபா நாயகன்’ ட்ரைலர் இதோ.!

நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சபாநாயகன்’ திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் நடிகர் அசோக் செல்வன். சாக்லேட் பாயாக ‘தெகிடி’ என்ற படத்தில் நடிக்க ஆரம்பித்த இவர் தற்போது வரை பல படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு திருப்புமுனையாக அமைந்த இரண்டு படங்கள் என்று சொன்னால் அது ‘ஓ மை கடவுளே’ மற்றும் ‘போர்த் தொழில்’ ஆகிய படங்கள் தான். இதில் ‘போர்த் தொழில்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. போலீஸ் அதிகாரியாக நடிப்பில் அசத்தியிருந்தார் அசோக் செல்வன். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிளே பாயாக மாறி லீலைகள் செய்யும் அசோக் செல்வன்.! 'சபா நாயகன்' ட்ரைலர் இதோ.! 1

விளம்பரம்

மேலும் இவர் நடித்த ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘மன்மத லீலை’, ‘வேழம்’, ‘நித்தம் ஒரு வானம்’ ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. தற்போது இயக்குனர் சி எஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் ‘சபாநாயகன்’ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை அரவிந்த் ஜெயபாலன், ஐயப்பன் ஞானவேல் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்திருக்க லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருக்கிறார். மேலும் அசோக் செல்வனுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்திருக்கிறார். இந்த படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி வைரலான நிலையில், தற்போது படத்தின் ட்ரைலர் வெளியாகியிருக்கிறது. கதாநாயகனின் காதல் வாழ்வை மையமாகக் கொண்டு நகைச்சுவையாக காட்சிகள் நகர்கிறது.

தொடர்புடையவை  சிவானியை திருமணம் செய்ய ஓகே சொன்ன சூர்யா.! கதறி அழும் வெண்ணிலா.! ப்ரோமோ இதோ.!

பிளே பாயாக மாறி லீலைகள் செய்யும் அசோக் செல்வன்.! 'சபா நாயகன்' ட்ரைலர் இதோ.! 3

விளம்பரம்

இளம் தலைமுறையை கவரும் வகையில் இந்த படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற டிசம்பர் 15ம் தேதி இந்த திரைப்படம் தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் படத்தின் ட்ரைலரை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Saregama Tamil

விளம்பரம்

Leave a Comment