விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ஆஹா கல்யாணம்’ தொடரில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் சூர்யாவை எதிர்த்து பேசும் ஐஸ்வர்யாவை மகா வெளுத்து வாங்குகிறார். ‘வாயை பெயர்த்து விடுவேன்’, ‘ஓங்கி அறைந்து விடுவேன்’ என்று சொல்லி மிரட்டி ஐஸ்வர்யாவை சூர்யாவிடம் மன்னிப்பு கேட்க வைக்கிறார் மஹா. இதனால் ராஜலட்சுமி, சித்ரா, கௌதம், தாத்தா, பாட்டி உள்ளிட்ட அனைவரும் மஹாவின் செயலை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘ஆஹா கல்யாணம்’ தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டங்களை எட்டி வருகிறது. குறிப்பாக மஹா – சூர்யா ஜோடிகள் எப்போது இணைவார்கள் என்கிற எதிர்பார்ப்புடன் கதைக்களம் நகர்ந்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது கதைப்படி ஐஸ்வர்யா விளம்பர படங்களில் ஆபாசமாக நடிக்கிறார். இந்த விஷயம் வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரிந்து விடுகிறது. இனி ஐஸ்வர்யாவை நடிக்க போக கூடாது என்பதற்காக சூர்யா அந்த விளம்பர படங்களையே கேன்சல் செய்து விடுகிறார். இந்த செய்தி அறிந்து ஐஸ்வர்யா சூர்யாவிடம் கோபத்தில் கத்திக் கொண்டிருக்கிறார். உங்களுக்கு யார் இந்த அதிகாரத்தை கொடுத்தது என்று சொல்லி சூர்யாவிடம் பயங்கரமாக சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு மஹா கோபத்தில் ஐஸ்வர்யாவிடம் கத்தி, “ஒழுங்கு மரியாதையாக எனது கணவரிடம் மன்னிப்பு கேள் இல்லை, என்றால் அடித்து வாயை உடைத்து விடுவேன்” என்று கத்துகிறார்.

மஹாவின் இந்த கோபத்தை பார்த்து வீட்டில் இருக்கும் ராஜலட்சுமி, சித்ரா, கௌதம், தாத்தா, பாட்டி உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு ஐஸ்வர்யா சூர்யாவிடம் வந்து தன்னை மன்னித்து விடுமாறு கேட்கிறார். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television