பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் உருக்கமான கடிதத்தை பதிவிட்ட ஜோவிகா.!

பிக் பாஸில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளராக இருந்த ஜோவிகா விஜயகுமார், நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்பு முதல் முறையாக பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். தனது கைப்பட எழுதி இருக்கும் கடிதத்தை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில் அவர், “நான் இந்த கடிதத்தை எழுதியதற்கு முக்கிய காரணம், என்னை ஆதரித்தவர்கள், என்னை ஊக்குவித்தவர்கள், என்னை நானாகவே ஏற்றுக்கொண்டவர்கள் ஆகிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக எழுதுகிறேன். உங்களுடைய அன்பு மற்றும் ஆதரவு இல்லாமல் என்னால் பிக் பாஸ் சீசன் 7ல் இத்தனை தூரம் கடந்து இருக்க முடியாது.

பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் உருக்கமான கடிதத்தை பதிவிட்ட ஜோவிகா.! 1
என்னை சிலர் பிக் பாஸ் சீசனில் இறுதிப்போட்டியில் காண விரும்பி என்னை வழி நடத்தினீர்கள். ஆனால் அவர்களுக்காக நான் மிகவும் குற்றமாக உணர்கிறேன். எனது தாயிடமும் திருப்பி நான் வந்து சேர இதுதான் எனக்கு சரியான நேரம். என் தாயார் தான் என்னுடைய உலகம், என் தாயாரை பார்த்துக் கொள்வதும், அவரைப் பாதுகாப்பதும் என்னுட கடமை மற்றும் பொறுப்பாகும். கடந்த வாரம் ஒரு நடந்த ஒரு நிகழ்வு என்னை மிகவும் அழுத்தமாக உணர வைத்தது. கண்டிப்பாக நான் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பதை அது ஆழமாக உணர்த்தியது. பிக்பாஸில் இருந்து அழகான நினைவுகள் மற்றும் பாடங்களை நான் எப்பொழுதும் சுமந்து கொண்டே இருப்பேன்.

விளம்பரம்
தொடர்புடையவை  காந்தாராவாக மாறி சந்தியாவை காப்பாற்றும் சரவணன்.! பரபரப்பான ராஜா ராணி ப்ரோமோ.!

பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் உருக்கமான கடிதத்தை பதிவிட்ட ஜோவிகா.! 3
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு ஹவுஸ் மேட்ஸையும் நான் வாழ்த்துகிறேன். அவர்களில் சிறந்தவர் வெல்லட்டும் என எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நான் எதற்காகவும் வருத்தப்படவில்லை. நான் என்னுடைய சரி மற்றும் தவறுகளை காண்பித்தேன். என்னுடைய ஆழமான நன்றியை விஜய் தொலைக்காட்சிக்கும், எண்டோமால் குரூப் மற்றும் டிஸ்னி ஹாட் ஸ்டார், பானிஜெ ஏசியா ஆகிய அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் திரைக்குப் பின்னால் கடினமாக பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் உருக்கமான கடிதத்தை பதிவிட்ட ஜோவிகா.! 5
மேலும் எனது ஆதரவாளர்களுக்கும் எனது உருக்கமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் இல்லை என்றால் என்னால் இதை செய்திருக்க முடியாது. என்னுடைய வருங்கால பயணத்தின் மூலமாக உங்களுடைய இதயங்களில் நான் எப்பொழுதும் நீங்காத இடத்தை பிடிப்பேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அலைகளுக்கு எதிராக தொடர்ந்து நீச்சல் போட்டுக் கொண்டே இருப்பேன் – ஜோதிகா விஜயகுமார்” என்று அந்த கடிதத்தை எழுதியிருக்கிறார்..!

விளம்பரம்

விளம்பரம்

Leave a Comment