ரசிகர்களுக்கு தன் கையால் பிரியாணி பரிமாறிய லேடி சூப்பர் ஸ்டார்.! வைரலாகும் வீடியோ இதோ.!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகை ஆக வளமுடன் நடிகை நயன்தாரா தனது லேடி ரசிகைகளுக்கு பிரியாணி பரிமாறிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரை உலகில் கோலோச்சி வருபவர் நடிகை நயன்தாரா. இவர் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ எனவும் அறியப்படுகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரசிகர்களுக்கு தன் கையால் பிரியாணி பரிமாறிய லேடி சூப்பர் ஸ்டார்.! வைரலாகும் வீடியோ இதோ.! 1

விளம்பரம்

கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி இவரது 75வது திரைப்படமான ‘அன்னபூரணி’ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது சில காலமாக கதாநாயகிகளை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் படங்களை தேர்வு செய்து நயன்தாரா நடித்து வருகிறார். அந்த வகையில் நிலேஷ. கிருஷ்ணா இயக்கத்தில் இவர் நடித்துள்ள ‘அன்னபூரணி’ வெளியாகி அவரது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

ரசிகர்களுக்கு தன் கையால் பிரியாணி பரிமாறிய லேடி சூப்பர் ஸ்டார்.! வைரலாகும் வீடியோ இதோ.! 3
ரசிகர்கள் எளிதில் யூகிக்கக்கூடிய கதையாம்சமாக இருந்த போதிலும் நிலேஷ் கிருஷ்ணாவின் விறுவிறுப்பான திரைக்கதையில் இந்த படம் ரசிகர்கள் மனதில் இடம் பெற்றுள்ளது. இசையமைப்பாளர் தமனின் இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்து உள்ளது. பிராமண பெண்ணாக வரும் நயன்தாரா தனது விருப்பமான உணவு சமைக்கும் தொழிலில் எப்படி சோபிக்கிறார் என்பதை இந்த படம் பேசுகிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  மரண குத்தாட்டம் போடும் தளபதி.! ரஞ்சிதமே பாடலின் HD வீடியோ சாங் வெளியானது.!

ரசிகர்களுக்கு தன் கையால் பிரியாணி பரிமாறிய லேடி சூப்பர் ஸ்டார்.! வைரலாகும் வீடியோ இதோ.! 5

நயன்தாராவுடன் ஜெய், சத்யராஜ் ஆகியோரின் கதாபாத்திரங்கள் ரசிக்கும்படியாக இருந்தது. அடுத்தபடியாக ‘மண்ணாங்கட்டி’ என்கிற படத்தில் நயன்தாரா கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த நிலையில் நயன்தாரா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றபோது அங்கு அனைவருக்கும் பிரியாணி பரிமாறிய வீடியோ வைரலாகி வருகிறது.

விளம்பரம்

ரசிகர்களுக்கு தன் கையால் பிரியாணி பரிமாறிய லேடி சூப்பர் ஸ்டார்.! வைரலாகும் வீடியோ இதோ.! 7
படத்தின் ப்ரோமோஷன் விழாவிற்காக கல்லூரி ஒன்றிற்கு சென்ற அவர், அங்கு ரசிகைகளுக்கு பிரியாணி பரிமாறி இருக்கிறார். நடிகர் ஜெய்யும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தனது படத்திற்காக எந்தவிதமான பிரமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாத நயன்தாரா ‘அன்னபூரணி’ திரைப்படத்திற்கு பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்

Leave a Comment