நடிகை கனகா தன்னை ஏமாற்றி விட்டதாக நடிகை குட்டி பத்தினி தற்போது வேதனையுடன் சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் நடிகை கனகா. பிரபல நடிகையாக இருந்த தேவிகாவின் மகளான இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிகளில் நடித்திருக்கிறார். ரஜினிகாந்த், பிரபு, கார்த்திக், ராமராஜன், விஜயகாந்த், சரத்குமார், விவேக் போன்ற முக்கிய நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் கனகா. தனது தாயாரின் இறப்புக்கு பின்னர் தந்தையின் ஆதரவு இல்லாமல் தனியாக ஒரு வீட்டில் வசித்து வருகிறார். நாட்கள் செல்ல செல்ல பாழடைந்த அந்த வீட்டில் பூனைகளுடன் தனியாக வசித்து வருகிறார். எதிலும் கவனம் செலுத்த முடியாத அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு வீட்டுக்குள்ளேயே முடங்கினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு கனகாவிற்கு புற்றுநோய் என்றும், கேரளாவில் சிகிச்சை பெற்று வந்த அவர் மரணம் அடைந்து விட்டார் என்றும் புகைப்படங்கள் பரவத் தொடங்கியது. ஆனால் தான் உயிருடன் தான் இருக்கிறேன் என்று சொல்லி தனியார் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார் கனகா. கதவுகளை திறக்காமல் ஜன்னல்களை எல்லாம் திரையிட்டு மூடிக் கொண்டு, முடங்கி இருக்கும் கனகா யாரிடமும் தொடர்பில்லாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் நடிகை குட்டி பத்மினி கனகாவை நேரில் சந்தித்து அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார். கனகா தன்னிடம் நன்றாக பேசியதாகவும், ஒரு நாள் குட்டி பத்மினி நடத்தி வரும் youtube சேனல்களில் ரசிகர்களுக்காக இன்டர்வியூ ஒன்று கொடுக்க ஒப்புக்கொண்டதாகவும் குட்டி பத்மினி கூறியிருந்தார்.

இந்த நிலையில் குட்டி பத்மினியிடம் ரசிகர்கள் தொடர்ந்து கனகாவின் இன்டர்வியூ எப்போது வரும்? என்று கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தனர். அதற்கு பதில் அளித்திருக்கும் குட்டி பத்மினி, “நான் கனகாவை சந்தித்தபோது அவரிடம் whatsapp கூட இல்லை, பின்னர் வாட்ஸ் அப்பை அவரது மொபைலில் இன்ஸ்டால் செய்து கொடுத்தேன். பின்னர் வீட்டிற்கு சென்ற அவர் தன்னுடைய youtube சேனலுக்கு பேட்டியளிக்க தான் அவரை தொடர்பு கொண்ட போது தான் செய்த கால் எதையுமே அவர் எடுக்கவில்லை, மேலும் தான் அனுப்பும் குறுஞ்செய்திகளை படிக்கிறார். ஆனால் எந்த மெசேஜுக்கும் அவர் ரிப்ளை செய்யவில்லை, அவர் என்னை சந்தித்த போது கூட ஒரு காபி ஷாப் சென்றோம் வீட்டிற்கு வாங்க என்று கூட அவர் என்னை அழைக்கவில்லை.

கனகா யாரையுமே சந்திக்க தயாராக இல்லை என்பது தற்போது நன்றாக புரிகிறது. அவர் என்னை கட்டி அணைத்து முத்தமிட்டு மகிழ்ச்சியாக பேசி விட்டுச் சென்றார். அந்த நினைவே போதும். அவருக்கு தனிமை தான் மிகவும் பிடித்திருக்கிறது. இனி யாரிடமாவது பழகினால் ஏமாந்து விடுவோமோ என்கிற அஞ்சுகிறா? என்று எனக்கு புரியவில்லை. கனகாவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறேன். ஆனால் அவர் ஒத்துழைத்தால் தான் என்னால் அவருக்கு உதவ முடியும். அவரை பேட்டி எடுக்க முடியாமல் போனதை நினைத்து வருந்துகிறேன்” என்று அந்த வீடியோவில் அவர் கூறியிருக்கிறார். நீங்களும் அவரின் முழு வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: KPTV