‘பாக்கியலட்சுமி’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் பாக்யா நடத்தி வரும் பொருட்காட்சி கேன்டீனுக்கு பெண் அமைச்சர் ஒருவர் வருகை தருகிறார் அவர் பாக்யாவின் திறமையை பாராட்டி அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கிறார். இதை பார்க்கும் ஈஸ்வரி நெகிழ்ந்து போகிறார். பின்னர் வீட்டிற்கு வரும் பாக்யாவிடம் ஈஸ்வரி மன்னிப்பு கேட்டு அவரை கட்டி அணைத்துக் கொள்கிறார். ஈஸ்வரியின் இந்த மனமாற்றத்தை பார்த்த பாக்யா கண்கலங்கி அழுது கொண்டிருக்கிறார். அந்த நெகிழ்ச்சியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் பாக்கியாவிற்கு சமைக்கும் திறன் இருப்பதால் சமையலில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பல கட்ட போராட்டத்திற்கு பின்னர் அவருக்கு அரசு பொருட்காட்சி ஒன்றில் சமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் பொருட்காட்சி கேண்டீன் ஆர்டரை எடுத்து சமையலில் அசத்திக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் பெண் அமைச்சர் ஒருவர் பாக்யாவின் திறமையை பாராட்டி அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கிறார். இந்த நிகழ்ச்சியை வீட்டில் இருந்தபடியே ஈஸ்வரி, செழியன், கோபி ஆகியோர் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். பின்னர் வீட்டிற்கு வரும் பாக்யாவிடம் ஈஸ்வரி தான் பாக்யாவை நினைத்து பெருமைப்படுவதாக கூறி கண்கலங்கி கட்டிப்பிடித்து அழுகிறார். இதைப் பார்க்கும் பாக்யாவும் நெகிழ்ச்சியுடன் கண்கலங்கி அழுகிறார்.

இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் இப்பொழுதாவது ஈஸ்வரிக்கு பாக்யாவை பாராட்ட வேண்டும் என்று மனம் வந்ததே? இனியாவது ஈஸ்வரி பாக்யாவை புரிந்து கொண்டு நடந்து கொள்ள வேண்டுமென்று அறிவுரை கூறி வருகின்றனர். நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television