கதிருக்கு தாயாக மாறிய மகள் தாரா.! மனம் உடைந்து அழும் கதிர்.! இனியாவது திருந்துவானா.?

‘எதிர்நீச்சல்’ சீரியலின் நாளைக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் கதிரின் மகள் கதிருக்கு உணவு ஊட்டி விட, நெகிழ்ந்து போன கதிர் கண்ணீர் விட்டு கதறி அழுது கொண்டிருக்கிறார். இதனால் கதிரின் குணாதிசயத்தில் மாற்றம் ஏற்பட்டு, அவரும் சக்தி போல திரும்பி வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களும் கதிர் அவ்வாறு மாற வேண்டும் என்பதே விரும்புகின்றனர். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் பல அதிரடியான திருப்பங்கள் நடந்து வருகிறது. அதில் கதிரை அடையாளம் தெரியாத நபர்கள் நடு ரோட்டில் வைத்து அடித்து கை, கால்களை உடைத்து போடுகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கதிருக்கு தாயாக மாறிய மகள் தாரா.! மனம் உடைந்து அழும் கதிர்.! இனியாவது திருந்துவானா.? 1
கை கால்கள் உடைந்த நிலையில் கதிரால் சாப்பிடக்கூட முடியவில்லை. அவரது அடிப்படை தேவைகளை கூட அவரால் நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. நந்தினி தான் அவரை இத்தனை நாட்களாக பார்த்துக் கொள்கிறார். இந்த நிலையில் வீட்டிற்கு வந்த அவரிடம் சாப்பிடுமாறு நந்தினி கூறிவிட்டு ஊட்டி விட முயற்சிக்கிறார். அப்போது கதிரால் சாப்பிட முடியவில்லை எனவே அவளது மகள் தாரா, “சாப்பிட்டால் தான் அப்பா தெம்பாஐ இருக்க முடியும்” என்று சொல்லி உணவு தட்டை வாங்கி அவருக்கு ஊட்டி விடுகிறார். தாராவின் இந்த செயலை பார்த்த கதிர் மனம் உடைந்து கண்ணீர் விட்டு அழுகிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  அர்ஜுனை கடத்தி வந்து கட்டி வைத்து அடித்து துவைக்கும் தமிழ்.! தரமான சம்பவம் பண்ணிடீங்க தமிழ்.!

கதிருக்கு தாயாக மாறிய மகள் தாரா.! மனம் உடைந்து அழும் கதிர்.! இனியாவது திருந்துவானா.? 3

இந்த ப்ரோமோவைப் பார்த்த ரசிகர்கள் பலரும் இத்தனை நாட்களாக தாரா மீதும் நந்தினி மீதும் எரிந்து எரிந்து விழுந்தீர்களே? இன்று உங்களை அவர்கள்தான் கண் போல பார்த்துக் கொள்கிறார். இனிமேலாவது நந்தினியுடன் திருந்தி வாழுங்கள் என்று சொல்லி அறிவுரை கூறி வருகின்றனர். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Sun TV

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment