விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மாயாவை காப்பாற்றுவதற்காக விஜய் டிவி செய்திருக்கும் வேலை என்று நெட்டிசன்கள் மோசமாக விமர்சித்து வருகின்றனர். அதற்கான ஆதாரங்களையும் அவர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டங்களை எட்டி இருக்கிறது. 86 நாட்களை நிறைவு செய்துள்ள இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் ஏழு பேர் நாமினேஷனில் மாட்டி இருக்கின்றனர். 23 போட்டியாளருடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 13 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் மீதம் தற்போது 10 பேர் மட்டுமே போட்டியில் தொடர்ந்து வருகின்றனர்.

பிரதீப்பிற்கு ரெக்கார்டு கொடுத்து வெளியே அனுப்பியதைத் தொடர்ந்து பவா செல்லத்துரை, அனன்யா, வினுஷா, யுகேந்திரன், அக்ஷயா, ஜோவிகா, கூல் சுரேஷ், சரவண விக்ரம் உள்ளிட்ட போட்டியாளர்கள் வெளியேறி இருக்கின்றனர். இந்த நிலையில் இந்த வாரம் அனைத்து போட்டியாளர்களும் நாமினேஷனில் இருப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் ஓபன் நாமினேஷன் வைத்து பிக் பாஸ் அதிர்ச்சி கொடுத்திருந்தார். இதில் மாயா, நிக்சன், தினேஷ், மணிசந்திரா, விஷ்ணு, விஜய் வர்மா, ரவீனா ஆகியோர் நாமினேஷனில் சிக்கி இருந்தனர். தற்போது வாக்கெடுப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது விஜய் தொலைக்காட்சி மீது மிகப்பெரிய குற்றச்சாட்டு ஒன்றை நெட்டிசன்கள் பரப்பி வருகின்றனர். அதாவது எப்பொழுதும் பிக் பாஸ் வாக்களிக்கும் இணையதளமான ஹாட்ஸ்டாரில் ஆங்கில அகர வரிசைப்படி (alphabetical order) தான் பெயர்கள் மற்றும் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த முறை மாயா பெயர் முதலில் இருக்கிறது. தொடர்ந்து நிக்சன் படம் இருக்கிறது. மாயா மற்றும் நிக்சனை ஆரம்பம் முதலே காப்பாற்றி வருவதாக விஜய் தொலைக்காட்சி மீது ஏற்கனவே குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், தற்போது வாக்கெடுப்பில் இது போன்ற மாற்றத்தை செய்திருப்பது மாயாவையும் நிக்சனையும் காப்பாற்றுவதற்கு தானா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Have you noticed that Every time in Hotstar the voting people list will be in "Alphabetical order" but today #Maya and #Nixen is listed above #Dinesh and #Mani such a Shameless act by VTV#BiggBossTamil7 #BiggBossTamil#BiggBoss7Tamil pic.twitter.com/shlldFY4FI
— Aadhavi (@Classicparktv) December 26, 2023