விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ஆஹா கல்யாணம்’ சீரியலில் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தற்போது ரவுடிகள் மஹாவை சூழ்ந்து கொண்டு தாக்கும் சமயத்தில் சரியாக சூர்யா வந்து மஹாவை காப்பாற்றி வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். அதை பார்க்கும் சூர்யாவின் தாயார் ராஜலட்சுமி அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போய் நின்று கொண்டிருக்கிறார்.்இவர்கள் இருவரும் பிரிந்து விடுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தார் ராஜலட்சுமிக்கு தற்போது இது பேரிடியாக அமைந்திருக்கிறது. அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

‘ஆஹா கல்யாணம்’ தொடரில் பணக்காரனாக இருக்கும் சூர்யா, ஏழை வீட்டு பெண்ணாக இருக்கும் மஹாவை விதி வசத்தால் திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் இந்த திருமணத்தில் சூர்யாவின் தாயார் ராஜலட்சுமிக்கு சிறிதும் உடன்பாடு இல்லை. எனவே சூர்யா மஹா இருவரும் இணைந்து விடக்கூடாது என்று திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார் ராஜலட்சுமி. இந்த நிலையில் தற்போது மஹாவுக்கும் சூர்யாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. மஹாவை இரவில் மழையில் வீட்டிலிருந்து வெளியே தள்ளுகிறார் சூர்யா. ஆனால் சூர்யாவின் தந்தை மஹவை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்து விடுகிறார்.
மஹாவும் சூர்யாவும் நிரந்தரமாக பிரிந்து விடுவார்கள் என்று ராஜலட்சுமி வீட்டில் அமர்ந்து திட்டம் திட்டிக் கொண்டிருக்கிறார். அதே சமயம் ரோட்டில் மஹாவை ரவுடிகள் சிலர் சூழ்ந்து கொண்டு கலாட்டா செய்கின்றனர். அப்போது சூர்யா சரியான சமயத்தில் வந்து மஹாவை காப்பாற்றி வீட்டில் அழைத்துச் செல்கிறார். தனது மகனும் மஹாவும் இனி இணையவே மாட்டார்கள் என்று சந்தோசத்தில் இருந்த நிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து வருவதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போகிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television