விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் தற்போது ஸ்ருதி தனது துணிகளை துவைத்து தருமாறு மீனாவிடம் கேட்கிறார். மீனாவும் துவைத்து தருவதாக ஒப்புக்கொள்ள அவரது கைகளில் 2000 ரூபாய் பணத்தை கொடுத்து அவரை வேலைக்காரி போல நடத்துகிறார். இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட முத்து கோபத்தில் கொந்தளிக்கிறார். எனவே அவருக்கும் ஸ்ருதிக்கும் இனி சண்டை எழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த அதிரடிக்கு ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் தற்போது தயாராகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அண்ணாமலையின் மூன்று மகன்களுக்கும் திருமணமாகிவிட்டது. அதில் இரண்டாவது மகனாக இருக்கும் முத்துவின் மனைவி மீனா ஏழை என்பதால் மற்ற மருமகள்களும் மாமியாரும் சேர்ந்து கொண்டு அவரை மிகவும் இளக்காரமாக நடத்துகின்றனர். மேலும் தற்போது திருமணம் ஆகி வந்த ஸ்ருதியும் சேர்ந்து கொண்டு மீனாவை பாடாய்படுத்துகிறார். இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், மீனா துணி துவைப்பதற்காக செல்கிறார். அப்போது விஜயா தனது துணிகளை கொண்டு வந்து கொடுத்து துவைத்து தருமாறு கூறுகிறார். அப்போது ஸ்ருதி தன்னுடைய துணிகளையும் துவைத்து கொடுக்குமாறு மீனாவிடம் கூறுகிறார். மேலும் அவரது கையில் 2000 ரூபாய் காசை கொடுத்து இதை வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார் ஸ்ருதி.

இதனால் மனம் உடைந்து போன மீனா காசு கொடுத்து என்னை வேலைக்காரியாகவே நடத்துகிறீர்களே? என்று கண்ணீருடன் கூறுகிறார். மேலும் தனது கணவர் முத்துவிடம் சென்று இந்த விஷயத்தை கூற, முத்து கோபத்தில் கொந்தளிக்கிறார். எனவே ரோகிணி போலவே அடுத்து ஸ்ருதிக்கும் முத்துவிற்கும் சண்டைகள் எழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television