தினேஷ் ரட்சிதா திருமண வாழ்க்கை குறித்து பேச நீங்க யாரு? விசித்ராவை வெளுத்து வாங்கிய கமல்.!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தினேஷ் மற்றும் ரட்சிதா பிரிவு குறித்து பேசிய விசித்ராவை கமல் கடுமையாக கண்டிக்கிறார். அப்போது தினேஷ் மனமுடைந்து கண்கலங்கி கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. பிக் பாஸ் சீசன் 7 நிறைவு கட்டங்களை தற்போது எட்டி இருக்கிறது. இதில் 10 பேர் விளையாடி வந்த நிலையில் தற்போது ரவீனா மற்றும் நிக்சன் இருவரும் வெளியேற்றப்பட்டு மீதம் எட்டு பேர் விளையாட இருப்பதாக தெரிகிறது. கடைசியாக மூன்று பேரை எலிமினேட் செய்துவிட்டு இறுதிப் போட்டிக்கு ஐந்து பேரை ஃபைனலிஸ்ட்டாக அழைத்துச் செல்ல பிக் பாஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தினேஷ் ரட்சிதா திருமண வாழ்க்கை குறித்து பேச நீங்க யாரு? விசித்ராவை வெளுத்து வாங்கிய கமல்.! 1
இந்த நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளர்களாக இருந்து வருபவர்கள் தான் தினேஷ் மற்றும் விசித்ரா. தினேஷ் எப்பொழுதும், எதற்கெடுத்தாலும் விசித்ரா பெயரையே கூறிக் கொண்டிருப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். இது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், விசித்ராவிற்கும் ஒரு கட்டத்தில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியது. ரவீனா ஒரு முறை விசித்ராவை பாத்திரம் துலக்குவதற்கு அழைத்தபோது, தினேஷ் சொல்லித்தான் ரவீனா இவ்வாறு செய்கிறார் என்று தினேஷ் மீது மிகுந்த கோபம் கொள்கிறார் விசித்ரா. மேலும் ஒரு படி மேலே போய் தினேஷ் மற்றும் ரட்சிதா இருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை மோசமாக விமர்சனம் செய்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  ரொம்ப மன அழுத்தமா இருக்கு, நான் வீட்டுக்கு போறேன், பிக்பாஸ்ஸிடம் கதறி அழுத ஜிபி முத்து

தினேஷ் ரட்சிதா திருமண வாழ்க்கை குறித்து பேச நீங்க யாரு? விசித்ராவை வெளுத்து வாங்கிய கமல்.! 3

தினேஷ் போன்ற ஆட்களுடன் குடும்பம் நடத்த முடியாது. இனி நீ திரும்பி வந்து விடாதே என்று ரட்சிதாவிற்கு அவர் கேமரா முன்பு நின்று அறிவுரையையும் கொடுத்தார். தற்போது கமல் இது குறித்து விசித்ராவிடம் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார். இதைக் கேட்ட தினேஷ் கண்கலங்கி அமர்ந்திருக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment