சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘இலக்கியா’ சீரியல் இருந்து நடிகை ஹீமா பிந்து தற்போது விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக அதே தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த மற்றொரு நடிகை ஒருவர் கமிட்டாக இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. கடந்த 2002ம் ஆண்டு முதல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக தொடங்கி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் ‘இலக்கியா’.

டிஆர்பி ரேட்டிங்கிலும் இந்த சீரியல் குறிப்பிட தகுந்த இடத்தை பிடித்து வருகிறது. இதில் நந்தன் லோகநாதன், ஹீமா பிந்து, ரூபாஸ்ரீ உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இதில் ஹீரோயினாக நடித்து வரும் ஹீமா பிந்து ஏற்கனவே கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான ‘இதயத்தை திருடாதே’ என்கிற சீரியலின் மூலமாக நடித்து மக்கள் மனங்களில் இடம் பிடித்திருந்தார். அந்த சீரியல் திடீரென முடிவடைந்த நிலையில், தொடர்ந்து சன் டிவியில் ‘இலக்கியா’ சீரியல் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

இந்த சீரியல் வெற்றிகரமாக ஓடிவரும் நிலையில் சீரியல் இருந்து விலகுவதாக தற்போது ஹீமா பிந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். அவருக்குப் பதிலாக ‘வணக்கம் தமிழா’ என்கிற நிகழ்ச்சி மூலமாக பிரபலமான சாம்பவி இனி இலக்கியவாக நடிக்கப் போகிறார் என்கிற தகவல் இணையத்தில் கசிந்து இருக்கிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
View this post on Instagram