விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தற்போது மீனா தனது கணவர் முத்துவிடம் நெருங்கி பழகுகிறார். முத்து தனக்காக செய்த இந்த செயல்களை பார்த்து ஆனந்த கண்ணீர் வடிக்கிறார். பின்னர் முத்து மீனாவை அழைத்துக் கொண்டு ஹோட்டலுக்கு செல்கிறார். அந்த அழகிய ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் தனது மனைவியை வீட்டில் உள்ள அனைவரும் வேலைக்காரி போல நடத்துவதை பார்த்த முத்து அவருக்கு புதிதாக ஏதாவது தொழில் தொடங்கி கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார். எனவே அவருக்கு தனது வீட்டு வாசலிலேயே வண்டியில் பூக்கடை ஒன்றை அமைத்துக் கொடுக்கிறார் இதை கண்ட மீனாவும் அவரது தாயரும் மகிழ்ச்சி அடைகின்றனர். தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் முத்துவிடம் நெகிழ்ந்து போய் கண்ணீர் விட்டு அழுகிறார் மீனா. இந்த கடையை விரைவில் பூக்கடலாக மாற்றித் தருகிறேன் என்று முத்து கூறுகிறார்.

அப்போது மீனா, “நீங்கள் மட்டும் என் கூடவே இருந்தால் போதும்” என கூறுகிறார். பின்னர் மீனாவை வெளியில் அழைத்துச் செல்லும் முத்து ஹோட்டலுக்கு அழைத்துச் செல்கிறார். அந்த அழகிய ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. பலரும் “முத்து போல மனைவியை புரிந்து கொள்ளும் கணவங்கள் கிடைப்பதெல்லாம் வரம்” என்று சொல்லி கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர். நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television