பிக்பாஸில் இருந்து வெளியேறிய கையோடு பூர்ணிமா வெளியிட்ட அழகிய புகைப்படம்.!

பிக் பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் பூர்ணிமா தன்னுடைய குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தமிழ் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். பிக் பாஸ் சீசன் 7ல் 96 நாட்கள் விளையாடிய முக்கிய போட்டியாளர் பூர்ணிமா. இவர் ஆரம்பத்தில் ‘அராத்தி’ என்கிற youtube சேனலை தொடங்கி அதில் “மோனோ ஆக்டிங்” என்று சொல்லப்படும் ஒருவராக இருந்து முழு வீடியோவையும் செய்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு பிக் பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் சீசன் 7ல் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டார். சுமார் 96 நாட்கள் விளையாடி வந்த அவர் ரூ.16 லட்சம் பணப்பெட்டியுடன் நேற்று வெளியேறியிருக்கிறார்.

பிக்பாஸில் இருந்து வெளியேறிய கையோடு பூர்ணிமா வெளியிட்ட அழகிய புகைப்படம்.! 1
பணப்பெட்டி டாஸ்க் வைக்கப்பட்டது முதலே அதை எடுக்கலாமா? வேண்டாமா? என்கிற குழப்பத்திலேயே பூர்ணிமா இருந்து வந்தார். ஆனால் மாயா பூர்ணிமாவை சரியாக வழிகாட்டி பணப்பெட்டியை எடுக்க வைத்திருக்கிறார். யாராவது ஒருவர் தான் வெற்றி பெற முடியும். இரண்டாவது இடத்திற்கு வருபவர் கூட எதுவுமே கிடைக்காது. எனவே இந்த பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு செல்லுமாறு மாயா தொடர்ந்து பூர்ணிமாவை வலியுறுத்தி வந்தார். ஒரு கட்டத்தில் பணம் ரூ.16 லட்சம் ஆக உயர்ந்த உடனேயே பூர்ணிமா தான் அதை எடுத்துக் கொண்டு வெளியேறுவதாக கூறினார். இந்த முடிவை பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். ரூ.16 லட்சம் போக வெற்றியாளருக்கு ரூ.34 லட்சம் மட்டுமே பரிசாக கொடுக்கப்படும்.

விளம்பரம்
தொடர்புடையவை  ஏங்க உங்களுக்கு sign போட வேற இடமே கிடைக்கலையா? கன்னிகா நெற்றியில் Sign போட்ட சினேகன்

பிக்பாஸில் இருந்து வெளியேறிய கையோடு பூர்ணிமா வெளியிட்ட அழகிய புகைப்படம்.! 3
எனவே பூர்ணிமா வெற்றியாளரின் தொகையில் குறிப்பிட பங்கை எடுத்துக் கொண்டு வெளியில் சென்று இருக்கிறார். வெளியேறிய பின்னர் தனது அண்ணன் அண்ணி மற்றும் தாயாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவர் பகிர்ந்து இருக்கிறார். 96 நாட்களுக்குப் பிறகு தனது குடும்பத்தை சந்திப்பதாக அவர் பதிவிட்டு இருக்கிறார். பலரும் அந்த புகைப்படத்திற்கு லைக்குகளை குவித்து வருகின்றனர். ரசிகர்கள் பலரும் பூர்ணிமாவின் விளையாட்டை பாராட்டி வருகின்றனர். “96 நாட்களாக மிக வலுவான போட்டியாளராக உள்ளே இருந்தீர்கள். நீங்கள் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறியது மிகச்சிறந்த முடிவு” என்று அவரைப் பாராட்டி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Kishore Ravi (@kishore_janu_)

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment