தர்ஷினியை காரில் கடத்திய மர்ம நபர்கள்..! கதறி அழும் ஈஸ்வரி..! ‘எதிர்நீச்சல்’ ப்ரோமோ..!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலின் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தற்போது தர்ஷினியை மர்ம நபர்கள் ஆள் வைத்து கடத்தி விடுகின்றனர். இதனால் நடுரோட்டில் ஈஸ்வரியும் மற்ற மருமகள் அனைவரும் இணைந்து அழுது கொண்டிருக்கின்றனர். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. சன் தொலைக்காட்சியின் டாப் ஹிட் சீரியலாக ஓடிக்கொண்டிருக்கிறது ‘எதிர்நீச்சல்’ சீரியல். டிஆர்பி ரேட்டிங்கலும் அவ்வபோது முதலிடம் பிடித்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தர்ஷினியை காரில் கடத்திய மர்ம நபர்கள்..! கதறி அழும் ஈஸ்வரி..! 'எதிர்நீச்சல்' ப்ரோமோ..! 1
இந்த சீரியலில் தற்போது கதைப்படி ஜனனியின் தந்தை நாச்சியப்பனின் குடும்பம் ஜனனியிடமிருந்து அவரது தந்தையை பிரித்து விடுகிறது. கதை இப்படியாக நகர்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், தர்ஷினிக்கு குணசேகரன் கரிகாலனை திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறார். இந்த திருமணத்தில் யாருக்கும் துளியும் விருப்பமில்லை. இருப்பினும் தனது முடிவில் குணசேகரன் உறுதியாக இருக்கிறார். இந்த நிலையில் பள்ளிக்கு சென்று திரும்பி கொண்டிருக்கும் தர்ஷினியை மர்ம நபர்கள் சில காரில் கடத்துகின்றனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  ஜிபி முத்து அப்பா மாதிரி.! ஜிபி முத்துவை அழ வைத்த தனலட்சுமியை வெளுத்து வாங்கிய ஜனனி

தர்ஷினியை காரில் கடத்திய மர்ம நபர்கள்..! கதறி அழும் ஈஸ்வரி..! 'எதிர்நீச்சல்' ப்ரோமோ..! 3
தர்ஷினியின் செல்போன் கீழே கிடக்கிறது. அதை எடுத்துப் பேசும் ஒருவர் மொபைல் கீழே கிடப்பதாகவும், அதைத்தான் எடுத்துப் பேசுவதாகவும் கூறுகிறார். இதைக் கேட்டு மனமுடையும் ஈஸ்வரி தர்ஷினியை தேடி நடு ரோட்டில் கதறி அழுது கொண்டிருக்கிறார். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Sun TV

விளம்பரம்

Leave a Comment