என்.ஆர்.சி/சி.ஏ.பி – நாசிகளிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!

யூதர்களை வெறுத்த நாசிகள் அவர்களை தனிப்படுத்தவும், இறுதியாக நாட்டை விட்டு அகற்றவும் எவ்வாறு முயன்றனர் என்பதையெல்லாம் பார்க்க்கையில் இந்தியாவிலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் கோல்வல்கரின் சிந்தனையினால் ஈர்க்கப்படடவர்களின் செயல்கள் அனைத்தும் ஒத்து போகும்.

சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட தேசிய குடியுரிமை மசோதா 2019 நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலும் கிடைத்துவிட்டது. மதங்களின் அடிப்படையில் குடியுரிமை வழங்கும் நாடுகளுடன் இந்தியாவும் இணைந்திருக்கிறது. தற்போது வரை மூன்று நாடுகளுக்கு மட்டுமே பொருந்தும் இந்த சட்டம், விரைவில் நாடு முழுவதும் விரிவாக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். 

விளம்பரம்

இத்தகைய வெளிப்படையான பிரச்சாரம், நாட்டில் வாழும் மத சிறுபான்மையினருக்கு எதிரான எதிர்கால ஆபத்தை சுட்டிக் காட்டுகிறது. அதாவது 1993ஆம் ஆண்டில் நாஜிகள் வந்த பின்னர், அவர்களால் நடந்தேறிய கொடூர நடத்தைகளை நமக்கு அமித்ஷா-மோடி கூட்டணி நினைவுப்படுத்துகிறது. இங்கு முஸ்லீம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் செயல்களின் அச்சாய் அங்கு நடந்து வந்தது. 1930 மற்றும் 1940ஆம் ஆண்டுகளில் இந்தியா ஜெர்மனியை போல் இல்லாமல் இருந்தாலும், தற்போதைய சூழல் அன்றைய நாஜிகள் எவ்வாறு ஆறு மில்லியன் யூதர்களை குறிவைத்து அழித்தார்கள் என்பதற்கு அடிப்படை சான்றாக இருக்கிறது. காரணம் அங்கு மாற்றப்பட்டது அரசு மட்டுமில்லை, யூதர்கள் எதிராக மாற்றப்பட்ட சட்டங்களும் தான். 

என்.ஆர்.சி/சி.ஏ.பி - நாசிகளிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்! 1
ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு

யூத இன மக்களின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் உரிமைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக 1920ஆம் ஆண்டு நாஜி கட்சி 25 அம்சங்கக்ளை கொண்ட கொள்கையை விவரித்தது. அதன் மூலமாக யூத மக்களை ஆரிய சமூகத்திலிருந்து பிரிப்பதற்கான வேலைகளை 1933ஆம் ஆண்டு ஆட்சியில் அமர்ந்த பின்னர் சட்டங்களையும், விதிமுறைகளையும் விரைவாக கட்டவிழ்த்துக்கொண்டு இருந்தது. இது போன்ற தேசிய அளவிலிருந்து, உள்ளூர் வரையிலான அணைத்து மட்டங்களிலும் 2,000க்கும் மேலான யூத விரோத சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாக பல்வேறு ஆதாரங்களிலிருந்து நம்மால் புரிந்துக்கொள்ள முடிகிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  கமலேஷ் திவாரி கொலைவழக்கு: கதைகளின் கதை!

1993ஆம் ஆண்டில் யூதர்களை அரசாங்க வெளியிலிருந்து அகற்ற புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டன அதே போல வழக்கறிஞராக பணியாற்றவும், பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், அவர்களின் குடியுரிமையை நீக்குதல் மற்றும் தலைமை பதவிகளில் பணிபுரிய தடை போன்ற பல சட்டங்கள் இயற்றப்பட்டன..

இவ்வாறு தொழில்களிருந்தும், வெளிவாய்ப்புகளிலிருந்தும் அப்புறப்படுத்தப்பட்ட யூதர்கள், 1934ஆம் ஆண்டுகளில் மருத்துவம், பல் மருத்துவம், மருந்தகம் மற்றும் சட்டம் போன்ற முன்னணி தேர்வுகள் எழுத தடைவிதிக்கப்பட்டது. மேலும் இராணுவ சேவைகளிலிருந்தும் நீக்கப்பட்டனர். 

விளம்பரம்
என்.ஆர்.சி/சி.ஏ.பி - நாசிகளிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்! 3
கோல்வால்கரின் “நாம் அல்லது வரையறுக்கப்பட்ட நம் தேசம் “

மேலும் 1935களில் நியூரம்பெர்க் சட்டங்கள் இயற்றப்பட்டன இது மதம் மற்றும் இனம் சார்ந்தவற்றை பொருட்டு ரைக் குடியுரிமை மற்றும் ஜெர்மன் இரத்த மற்றும் கௌரவத்தை பாதுகாக்கும் சட்டங்களை உள்ளடக்கியதாக இருந்தன. இவ்விரண்டு சட்டங்களும் யூதர்களின் ஜேர்மனிய குடியுரிமையை பறித்து, யூத மற்றும் ஜேர்மனிய இணைப்பு திருமணங்கள் மற்றும் பாலியல் உறவுகளை சட்டவிரோதமாக அறிவித்தன. 

1935-1936 பகுதிகளில் பூங்காக்கள், உணவகங்கள் மற்றும் நீச்சல் குளங்களுக்குள் நுழைய யூதர்களுக்கு தடை விதிக்கப்பட்டன. மேலும், மின்சாரம் மற்றும் ஆப்டிகல் சார்ந்த பொருட்கள், மிதிவண்டி, தட்டச்சுப்பொறிகள் ஆகிய சாதனங்கள் தடைசெய்யப்பட்டு யூத மாணவர்களும், பேராசிரியர்களும் அரசாங்க பள்ளிகளிலிருந்து நீக்கப்பட்டனர். 

விளம்பரம்

1938ஆம் ஆண்டில் சினிமா, தியேட்டர், இசை நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், கடற்கரைகள் மற்றும் விடுமுறை விடுதிகளிலிருந்து விலக்கப்பட்டு, அவர்களுக்கென்று சிறப்பு அட்டைகள் வழங்கப்பட்டன. மேலும் தங்களது பெயர்களோடு ‘சாரா’ அல்லது ‘இஸ்ரேல்’ என்ற பெயர்களை இணைத்துக்கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டனர். யூதர்களின் பாஸ்பாட்களில் “ஜே” என்ற சிவப்பு எழுத்துடன் முத்திரையிட்டனர். 

உலக வரலாற்றில் நைட் ஆஃப் ப்ரோக்கன் கிளாஸ் என அழைக்கப்படும் 1938ஆம் ஆண்டு நவம்பர் 9-10 தேதிகளின் இரவுகளில் யூதர்களுக்கு எதிராக நாடு தழுவிய வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டன. இதன் மூலமாக யூதர்களின் ஜெப ஆலையங்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான கடைகள் அழிக்கப்பட்டன. 

விளம்பரம்
தொடர்புடையவை  கேப்டன் மேல என்ன வன்மம்.? மனம் உடைந்து தேம்பி தேம்பி அழுத பிரேமலதா விஜயகாந்த்.!

1939ஆம் ஆண்டுகளில் யூதர்கள் தங்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும் அவர்கள் உபயோகப்படுத்தப்பட்ட ரேடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, தங்கம், வெள்ளி, வைரங்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்கள் அனைத்தையும் இழப்பீடு இல்லாமல் அரசிடம் ஒப்படைக்க யூதர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர். மேலும் அவர்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

என்.ஆர்.சி/சி.ஏ.பி - நாசிகளிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்! 5
நாசி படைகளின் அணிவகுப்பு

1940களில் யூதர்களின் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டன. அதேபோல போர்க்கால அடிப்படையில் துணிகள் வழங்கப்படுவதற்கான ரேசன் அட்டைகளும் செயலிழந்த.

விளம்பரம்

1941ஆம் ஆண்டில் யூதர்கள் பொது தொலைபேசிகளில் பேசிக்கொள்ளவும், வீட்டு பிராணிகளை வளர்க்கவும் தடைசெய்யப்பட்டு, நாட்டிலேயே வாழக்கூடாது என சட்டமியற்றிவிட்டனர்.

1942ஆம் ஆண்டில் யூதர்கள் பயன்படுத்தி வந்த கம்பிளிகள் கைப்பற்றப்பட்டு, அவர்கள் பால்,முட்டை போன்ற பொருட்கள் வாங்குவதற்கு தடை செய்தது நாஜி சட்டங்கள். 

விளம்பரம்

கற்பனைவாதம் மூலம் ஆட்சியை பிடித்த நாஜிகளின் சட்டங்கள் வெறுமனே யூதர்களை மட்டுமில்லாது ரோம மக்கள், பாலியல் சிறுபான்மையினர், தொழிற்சங்கவாதிகள், கம்யூனிஸ்டுகள் மற்றும் சமூக ஜனநாயகவாதிகள், கறுப்பு இனத்தவர் போன்ற ஆரிய அல்லதா மக்களை தனிமைப்படுத்தி, சித்திரவதை செய்து பிக்கவும் கொடுமையான வழிகளில் கொல்லப்பட்டனர். ஹிட்லரால் இயற்றப்பட்ட அத்தனை சட்டங்களும் பாசிச வன்முறைகளை ஏற்படுத்த மட்டுமே பயன்படுத்தப்பட்டது.

ஒரு சிறுபான்மை இனத்தவருக்கு எதிராக இத்தனை ஒடுக்குமுறைகளையும் இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஆதரவான நிலைப்பாட்டினை கொண்டுள்ளன. அதன் அமைப்பின் ஒப்பற்ற தலைவரும், முதன்மை கருத்தியலாளருமான கோல்வால்கரின் “நாம் அல்லது வரையறுக்கப்பட்ட நம் தேசம்” என்ற புத்தகத்தில் இந்த ஆதரவு நிலைப்பாட்டினை நாம் காணலாம்.

விளம்பரம்
தொடர்புடையவை  குடியுரிமை திருத்த மசோதா: மம்தா பேரணி

“யூதர்களுக்கு எதிரான நாசிகளின் ஒடுக்குமுறைகளால் உலக நாடுகளே அதிர்ந்து போயின. இந்த இடத்தில் இனத்தின் பெருமையே மிக உயர்ந்ததாக வெளிப்பட்டுள்ளது. வெவ்வேறு இனங்களும், கலாச்சாரங்களும் வேறுபட்ட வேர்களை சென்றடைகிறது. ஆனால் இவைகள் ஒன்றிணைவது சாத்தியமற்றது என்பதனை ஜெர்மனி காட்டியுள்ளது. இந்துஸ்தானில் நாம் கற்றுக்கொள்ளவும், லாபமீட்டவும் நல்ல படிப்பினையாக ஜெர்மனி இருக்கிறது” 

அதுமட்டுமின்றி இந்து தேசம் குறித்து வரையறுக்கும் போது, “இந்து இனம், மதம், கலாச்சாரம் மற்றும் மொழி ஆகியவற்றிலிருந்து விலகி நிற்பவர்கள் தேசியத்தை சார்ந்தவர்களே இருக்க முடியாது.(பக்.99) இந்து மதத்திற்கு மாறுபட்ட மதம் மற்றும் கலாசாரசம் போன்றவற்றை பின்பற்றுபவர்களை வெளிநாட்டவராகவே கருதப்படவேண்டும்” (பக்.101)

விளம்பரம்
என்.ஆர்.சி/சி.ஏ.பி - நாசிகளிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்! 7
மோடி மற்றும் ஹிட்லர்

“இந்துஸ்தானில் உள்ள வெளிநாட்டு இனத்தவர்கள், இந்து கலாச்சாரத்தையும் மொழியையும் பின்பற்ற வேண்டும். இந்து மதத்தை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். இந்து இனம் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை மகிமைப்படுத்தும் சிந்தனைகளை மட்டுமே கேட்க வேண்டும். இந்து தேசத்தை ஒன்றிணைக்க வேண்டுமானால் மற்ற இனத்தவர்கள் அவர்களின் தனி சிறப்புகளை இழக்க வேண்டும். முழுக்க முழுக்க இந்து தேசத்திற்கு அடிபணிந்து செல்லவேண்டும். அவர்களுக்கென்று சிறப்பு சலுகைகள் ஏதும் கிடையாது. குடிமகனின் உரிமை கூட கிடையாது” (பக்.105)

கோல்வால்கரின் இத்தகைய கருத்து தான், தற்போதைய இந்தியாவில் நடைபெறும் கட்டமைப்புகளை அடித்தளமாக அமைகிறது. தேசிய குடியுரிமை மசோதா பிரிவினைக்கான கருவியாகவும், தேசிய மக்கள் தொகை பதிவு என்பது ஆழமான பிரிவுக்கு சட்டபூர்வமான தளத்தை அமைத்து கொடுக்கும்.

ஜெர்மனியின் அழிவிற்கு இன ஒடுக்குமுறை ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. இந்நிலைக்கு இந்தியா வெகுதூரத்தில் இல்லை. குடியுரிமை மசோதாவிற்கு நாட்டின் பல மூலைகளிலும் போராட்டம் நடந்து வருகின்றன. இந்நிலையில் வரலாற்று குறித்தான படிப்பினைகள் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் நமக்கு ஏற்பட்டுள்ளது.

விளம்பரம்

Leave a Comment