கார் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறு.! கொலை மிரட்ட விடுத்த சரண்யா பொன்வண்ணன்? CCTV காட்சிகள் வெளியானது.!

தமிழ் திரையுலகில் 90களில் முன்னணி கதாநாயகியாகவும், தற்போது இளம் கதாநாயகர்களுக்கு அம்மா கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தி வருபவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். தற்போது இவர் மீது கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கார் நிறுத்துவது தொடர்பாக அண்டை வீட்டாரோடு ஏற்பட்ட மோதலில் அவர் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கார் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறு.! கொலை மிரட்ட விடுத்த சரண்யா பொன்வண்ணன்? CCTV காட்சிகள் வெளியானது.! 1
சென்னை விருகம்பாக்கம் பகுதியில் வசித்து வருகிறார் சரண்யா பொன்வண்ணன். இவரது பக்கத்து வீட்டுக்காரரான ஸ்ரீதேவி என்பவர் நேற்று மருத்துவமனைக்கு செல்வதற்காக தனது காரை வெளியில் எடுத்துள்ளார். அப்போது பக்கத்து வீட்டுக்காரரான சரண்யா பொன்வண்ணன் கார் மீது மோதி கார் சேதமடைந்துள்ளது. இதை தெரிந்து கொண்ட சரண்யா பொன்வண்ணன் ஸ்ரீதேவியின் வீட்டிற்கு நேரில் சென்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

விளம்பரம்

கார் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறு.! கொலை மிரட்ட விடுத்த சரண்யா பொன்வண்ணன்? CCTV காட்சிகள் வெளியானது.! 3
எனவே ஸ்ரீதேவி விருகம்பாக்கம் காவல் நிலையத்திற்கு சிசிடிவி காட்சிகளுடன் சென்று சரண்யா பொன் வண்ணன் மீது கொலை மிரட்டல் புகார் விடுத்துள்ளார். அதேபோல் சரண்யா பொன் வண்ணனும் ஸ்ரீதேவி மீது புகார் அளித்திருக்கிறார். இருவர் மீதும் காவல்துறை விசாரணை செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும், விசாரணைக்கு பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியாகி இருக்கும் சிசிடிவி காட்சிகளை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Thanthi Tv

விளம்பரம்

Leave a Comment