நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் முறைப்படி விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ரஜினியின் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டிருந்தார். இந்த தம்பதிகளுக்கு லிங்கா மற்றும் யாத்ரா என்கிற இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு தாங்கள் இருவரும் திருமண வாழ்வில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாக அறிவித்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இவர்கள் பிரிவுக்குப் பின்னர் எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் ஒன்றாக கலந்து கொள்ளவில்லை. ஒரே ஒரு முறை தங்கள் மகனின் பள்ளி ஆண்டு விழாவில் மட்டும் ஒன்றாக கலந்து கொண்டனர். அவ்வப்போது தனது தந்தை நடிப்பில் வெளியாகும் படங்களின் ட்ரைலர் வெளியீட்டு விழா மற்றும் ஆடியோ வெளியீட்டு விழாவில் மட்டுமே மகன்கள் கலந்து கொள்கின்றனர். சில ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வரும் நிலையில் தற்போது இவர்கள் அதிகாரப்பூர்வமாக விவாகரத்திற்கு நீதிமன்றத்தை நாடியிருக்கின்றனர். சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு அளித்திருக்கும் அவர்கள், தங்களுக்கு முறைப்படி விவாகரத்து வழங்க கோரி இருக்கின்றனர்.

இந்த வழக்கு விசாரணை விரைவில் நீதிமன்றத்தில் வர இருக்கிறது. தங்களது திருமணத்தை செல்லாது என அறிவிக்க கோரி இருவரும் மனு தாக்கல் செய்திருக்கும் நிலையில் நீதிமன்றம் என்ன முடிவெடுக்க போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Thanthi TV