விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘மகாநதி’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாக இருக்கிறது. அதில் பசுபதியின் மகள் ராகிணியை விஜயின் தம்பி அஜய்க்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகளை நடத்தி வருகின்றனர். ராகிணியை பெண் பார்ப்பதற்காக தற்போது குடும்பத்துடன் பசுபதி வீட்டிற்கு வந்திருக்கின்றனர். அங்கு ராகிணிக்கும் காவேரிக்கும் தகராறு வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

காவேரி காதலித்து வந்த நிவினை தான் முதலில் ராகிணி காதலித்து வந்தார். ஆனால் நிவின் ராகிணியை வெறுத்து ஒதுக்குவதால் அவர் தற்போது விஜயின் தம்பி அஜயை திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார். ஆனால் அவர் விருப்பப்பட்டு இந்த திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. காவேரி விஜயின் மனைவியாக வாழ்ந்து வருவதால் அவரை துன்புறுத்துவதற்காக இந்த திருமணத்திற்கு சம்மதிக்கிறார்.

தற்போது பெண் பார்க்க வந்த இடத்தில் இந்த உண்மையை ராகிணி காவேரியிடம் கூறுகிறார். அப்போது காவேரி இந்த திருமணம் நடக்கவே நடக்காது என்று சொல்லி ராகிணியிடம் சபதம் போட்டுக் கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television