விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ஆஹா கல்யாணம்’ சீரியலில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ஐஸ்வர்யா கர்ப்பமாக இல்லை என்கிற உண்மையை அவரது மாமியார் சித்ரா தேவி தெரிந்து கொள்கிறார். ஐஸ்வர்யா மறைத்து வைத்திருக்கும் மருத்துவ குறிப்புகளை அவர் எடுத்து பார்த்து விடுகிறார். எனவே இனி வீட்டில் பிரச்சனை வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

‘ஆஹா கல்யாணம்’ தொடரில் கௌதமின் மனைவியாக இருக்கும் ஐஸ்வர்யா கர்ப்பமாக இல்லாத போதிலும் கர்ப்பமாக இருப்பதாக கூறி வீட்டில் உள்ள அனைவரையும் ஏமாற்றி வருகிறார். இந்த நிலையில் சித்ரா தேவி மருத்துவருக்கு போன் செய்து பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது நீங்கள் கொடுத்த மாத்திரையை நான் அவருக்கு ஜூஸில் கலக்கி கொடுத்தேன். ஆனால் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை என கூறுகிறார்.

அப்போது மருத்துவர் ஒன்று நீங்கள் மாத்திரையை மாற்றி கொடுத்திருக்க வேண்டும். இல்லை என்றால் அவருக்கு கர்ப்பமாகவே இல்லாமல் இருக்க வேண்டும் என்று கூறுகிறார். இதனால் சித்ரா ஐஸ்வர்யாவின் மெடிக்கல் ரிப்போர்ட்டை எல்லாம் எடுத்துப் பார்க்கிறார். ஐஸ்வர்யா கர்ப்பமாக இல்லை என்பதை சித்ரா தெரிந்து கொண்டால் வீட்டில் அடுத்த பிரச்சினை வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television