
ஆந்திராவில் குண்டூர் நகர் பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் தனது 5 வயது மகளை வீட்டில் தனியாக விட்டுச் சென்றிருக்கிறார். அதன்பின்னர் அந்த சிறுமி தான் குடியிருக்கும் வீட்டில் பக்கத்து வீடான உரிமையாளர் வீட்டில் டிவி பார்க்க சென்றுள்ளார். இந்த நிலையில், சிறுமியை வீட்டு உரிமையாளருடைய 16 வயது மகன் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறான்.
இதை யாரிடமாவது சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்றும் அவன் மிரட்டல் விடுத்துள்ளான். இதனையடுத்து வயிற்று வலியால் துடித்த சிறுமியை தாய் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததையடுத்து போலீசில் தாய் புகார் அளித்துள்ளார்.
போக்சோ சட்டத்தில் சிறுவனை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். டிஷா சட்டத்தின் கீழ் முதல் வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது.