
உலக அளவில் இரண்டு பெரும் பொருளாதார நாடுகளாக விளங்கும் அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக போரை முடிவிற்கு கொண்டு வரும் நோக்கில் இருதரப்புக்கும் இடையில் முதல் கட்ட ஒப்பந்தம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக சீன பொருட்கள் மீதான 15 சதவீத கூடுதல் வரி விதிப்பை அமெரிக்கா ரத்து செய்தது.
அதேபோல் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்கும் முடிவை சீனா கைவிட்டது. இதனை சீனாவின் நிதி அமைச்சகம் நேற்று அறிவித்தது.
விளம்பரம்
அமெரிக்க பொருட்கள் மீதான கூடுதல் வரிவிதிப்பு நேற்று முதல் அமலுக்கு வர இருந்தது குறிப்பிடத்தக்கது.இதன் மூலம் சீனா அமெரிக்கா இடையே பொருளாதார கொள்கை சுமுகமாக நடைபெறும் என்று நம்பப்படுகிறது.
விளம்பரம்