
மலையாளத்தில் ஜீத்து ஜோசப் என்ற இயக்குனர் இயக்கத்தில் மோகன்லால்-மீனா ஜோடியாக நடித்து திரையுலகில் வெளியான ‘திரிஷ்யம்’ படம் வசூல் சாதனை நிகழ்த்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தினை தமிழில் கமல்ஹாசன்-கவுதமி நடிக்க பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆகி வெளியானது. இரண்டு பெண் குழந்தைகளின் தந்தையாக கமல்ஹாசன் நடித்து இருப்பார்.
இந்த படத்தில் கமல்ஹாசனின் மூத்த மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் பெண் போலீஸ் அதிகாரியின் மகன் அடித்து கொள்கிறார்கள் மனைவியும் மகளும் சேர்ந்து பின்னர், பிணத்தையும் கொலை செய்ததற்கான ஆதாரங்களையும் கமல்ஹாசன் மறைத்து இருவரையும் போலீஸ் பிடியில் இருந்து காப்பாற்ற முயற்சி செய்து வருகிறார். புதிதாக கட்டப்பட்டு உள்ள போலீஸ் நிலையத்தின் அடியில் பிணத்தை கமல்ஹாசன் புதைத்து இருப்பதுபோல் படம் முடிகிறது.
பாபநாசம் படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதுபோல் தெலுங்கு, இந்தி, கன்னடம், சிங்கள மொழிகளிலும் இந்த படம் வெளியானது. மேலும் அனைத்து மொழியிலும் வரவேற்பை பெற்றது. இந்தியில் அஜய்தேவ்கானும், தெலுங்கில் வெங்கடேசும், கன்னடத்தில் ரவிசந்திரனும் நடித்து இருந்தனர்.
இதனையடுத்து தற்போது இந்த படத்தினை சீன மொழியிலும் ‘எ ஷீப் வித்தவுட் எ ஷெப்பர்டு‘ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு உள்ளது. யாங் சியோ, சுஹோ டன், ஜோன் சென் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. படம் வருகிற 20-ந்தேதி திரைக்கு வருகிறது.