“விவாகரத்துக்கு உண்மையான காரணம் இதுதான்” உண்மைகளை உடைத்த சைந்தவி.!

ஜி.வி பிரகாஷ் – சைந்தவி விவகாரத்து இணையத்தில் பூதாகரமாகி இருக்கும் நிலையில், தற்போது இது குறித்து சைந்தவி தனது சமூக வலைதள பக்கத்தில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். தங்களது விவாகரத்திற்கு என்ன காரணம்? என்பதை அவர் விளக்கி இருக்கிறார். இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் சிறு வயது முதலே நண்பர்கள். நட்பு ஒரு கட்டத்தில் காதலாக மாற, இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ‘அன்வி’ என்கிற நான்கு வயதில் மகளும் இருக்கிறார்.

"விவாகரத்துக்கு உண்மையான காரணம் இதுதான்" உண்மைகளை உடைத்த சைந்தவி.! 1

விளம்பரம்

இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு இருவரும் பிரிவதாக சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தனர். இந்த செய்திக்கு பின்னர் யூடியூப் சேனல்கள் பலவும் ஜி.வி பிரகாஷ் நடிகைகளுடன் நெருக்கமாக இருக்கிறார், ஜிவி பிரகாஷுக்கும் சைந்தவியின் தாயாருக்கும் ஒத்துப் போகவில்லை. இவர்களுக்குள் மதப் பிரச்சினை இருக்கிறது என்றெல்லாம் வதந்தியை கிளப்பினர். இந்ர நிலையில் இது குறித்து சைந்தவி விளக்கம் அளித்துள்ளார்.

"விவாகரத்துக்கு உண்மையான காரணம் இதுதான்" உண்மைகளை உடைத்த சைந்தவி.! 3

விளம்பரம்

அதில் அவர், சில youtube சேனல்கள் உண்மைக்கு மாறாக கதையை திரித்து வீடியோ வெளியிடுவது வருத்தத்திற்குரியதாக உள்ளது. நாங்கள் எங்கள் தனியுரிமையை கோரிய போதிலும் இப்படி செய்வது ஏற்புடையதல்ல. நான் யாருடைய தூண்டுதலின் பெயரிலும் விவாகரத்து செய்யவில்லை. அடிப்படையே தெரியாமல் ஒருவருடைய குணாதிசயத்தை தாழ்த்துவது ஏற்கத்தக்கது அல்ல. நாங்கள் இருவரும் எங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்காக, மனம் ஒத்து இந்த முடிவை எடுத்துள்ளோம்.

தொடர்புடையவை  விஜய்க்காக பார்த்து பார்த்து சமைத்த காவேரி.! காவேரி மீது காதல் கொள்ளும் விஜய்.! 'மகாநதி' ப்ரோமோ

"விவாகரத்துக்கு உண்மையான காரணம் இதுதான்" உண்மைகளை உடைத்த சைந்தவி.! 5

விளம்பரம்

ஜி.வி பிரகாஷும் நானும் 24 ஆண்டுகளாக நண்பர்களாக இருக்கிறோம். எங்கள் பள்ளி பருவம் முதலில் நாங்கள் நண்பர்கள், இந்த நட்பு இனியும் தொடர்ந்து கொண்டே இருக்கும். நன்றி” என பகிர்ந்துள்ளார். இந்த பதிவை மறுபகிர்வு பகிர்ந்து செய்துள்ள ஜி.வி பிரகாஷ், “உண்மை தெரியாமல் தங்கள் இஷ்டத்திற்கு கதை எழுதும் சேனல்களுக்காக இந்த பதிவு. தங்களுடைய சொந்த கற்பனை மற்றும் கதையை வைத்துக்கொண்டு ஒருவரின் குணாதிசயத்தை இழிவு படுத்தி சிலர் மகிழ்கின்றனர். ஆனால் இந்த கடினமான காலத்திலும் தனக்கு உறுதுணையாக நின்ற மற்றவர்களுக்கு நன்றி” என பகிர்ந்துள்ளார்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment